ரயில் மோதி உயிருக்கு போராடிய யானை உயிரிழந்தது : 5 நாட்களில் 4 யானைகள் பலியான சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2021, 10:35 am
Elephant Dead -Updatenews360
Quick Share

கோவை : ரயில் மோதி 3 நாட்களாக உயிருக்கு போராடி வந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

கோவை நவக்கரை அருகே ரயில்வே தண்வாளத்தை கடக்க முயன்ற காட்டு யானை ஒன்று அவ்வழியாக வந்த திருனந்தபுரம் – சென்னை விரைவு மோதியதில் திங்கட்கிழமை படுகாயமடைந்தது.

இதையடுத்து படுகாயமடைந்த யானைக்கு வனத்துறையினர் தற்காலிக கூடாரங்களை அமைத்து கால்நடை மருத்துவ குழுவினருடன் தீவிர சிகிச்சையளித்தனர். இதையடுத்து சிகிச்சையை துரிதப்படுத்த மருத்துவர்கள் ஆலோசனையோடு யானையை ஆலாந்துறை அடுத்த சாடிவயல் கிராமத்தில் உள்ள கும்கியானை முகாமிற்கு மாற்ற மருத்துவ குழு முடிவு செய்தது.

இதையடுத்து அங்கு கடந்த மூன்று நாட்களாக கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். தலை, முகம், படுகாயமடைந்தும், யானையின் இடிப்பு பகுதிகள் முழுமையாக செயல்படாமல் மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய யானை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

முன்னதாக யானை உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில், நரசிபுரம் கால்நடை மருத்துவருக்கு தகவல் அளித்தனர். பின் அங்கு வந்த மருத்துவர் கார்த்திகேயன் யானையின் இறப்பை உறுதி செய்தார்.

தொடர்ந்து அதே பகுதியில் யானைக்கு உடற்கூறு ஆய்வு செய்து பின் அடக்கம் செய்வதற்கான பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டனர். வால்பாறை, சிறுமுகை, போளுவாம்பட்டி, மதுக்கரை சரகங்களில் கடந்த 5 நாட்களுக்கு 4 காட்டு யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 65

0

0