பேருந்தை தாக்க முயன்ற யானை…அன்பாக பேசி வனத்திற்குள் அனுப்பிய பழங்குடியின மக்கள்: இணையத்தில் கவனம் ஈர்த்த வீடியோ..!!

Author: Rajesh
5 February 2022, 9:31 am
Quick Share

கோவை: காட்டு யானையை “போ சாமி போ” என அன்பாக சொல்லி பழங்குடியின மக்கள் மீண்டும் யானையை வனத்திற்குள் அனுப்பி வைக்கும் வீடியோ ஒன்று காண்போரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கோவை மாவட்டம் ஆனைகட்டிக்கு நேற்று மாலை கோவையில் இருந்து சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று தூமனூர் பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று பேருந்தை பார்த்ததும் ஆவேசமாக ஓடி வந்து தாக்க முயன்றதுள்ளது.

அப்போது பேருந்தில் இருந்த சில பழங்குடியின மக்கள் யானையை பார்த்து ‘போ சாமி..போ சாமி’ என சத்தமிட அந்த யானை அமைதியாக வனப்பகுதிக்குள் திரும்பி சென்றுள்ளது. இதனை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் .

இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 515

0

0