இறந்த கணவனின் சடலத்துடன் நான்கு நாட்கள் வாழ்ந்த மனைவி : காதலில் விழுந்தேன் பட பாணியில் நடந்த சம்பவம்!!

22 November 2020, 2:36 pm
Dead Body - Updatenews360
Quick Share

செங்கல்பட்டு : இறந்த கணவனின் உடலை வீட்டிலேயே வைத்து நான்கு நாட்களாக பாதுகாத்த மனைவியின் செயல் காண்போரை கண்கலங்க வைத்தது.

செங்கல்பட்டு அருகே பெரிய புத்தூர் கிராமம் உள்ளது. இங்கு நீஞ்சிலி அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் தாமோதரன் (வயது 62) . இவர் ஜாதகம் கணிப்பது ,பஞ்சாங்கம் பார்ப்பது போன்ற தொழில் செய்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி சாரதா என்ற மனைவி இறந்துவிட்டதால் தனக்கு உதவியாக இருக்க திருச்சி பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரை துணைவியாக வைத்து கடந்த 6 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன் தாமோதரன் வசிக்கும் பகுதியில் ஒரு முதியவர் இறந்து விட்டதால் தாமோதரனின் நடமாட்டத்தை அக்கம்பக்கத்தினர் சரியாக கவனிக்கப்படவில்லை. தாமோதரன் மனைவி ராஜேஸ்வரி அவ்வப்போது அப்பகுதியில் இருக்கும் சிறுவர்களிடம் காசு கொடுத்து இரண்டு பேருக்கும் டிபன் வாங்கி வர சொல்லுவார்.

இதனால் அக்கம் பக்கத்தினருக்கு தாமோதரன் எங்கு சென்றார் என்ற சந்தேகம் ஏற்படவில்லை . அப்பகுதி மக்கள் தாமோதரன் எங்கே என்று கேட்கும்போதெல்லாம் அவர் ஊருக்கு சென்றுள்ளார் ,மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என ஏதாவது ஒரு பதிலை சொல்லி அனுப்பி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ராஜேஸ்வரியின் வீட்டு அருகே துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் தாமோதரன் வீட்டுக்குள் நுழைந்து பார்க்க முயன்றனர் . அப்போது ராஜேஸ்வரி வந்தவர்களை காய்கறி வெட்டும் கத்தி உள்ளிட்ட பொருட்களால் தாக்க முற்பட்டுள்ளார்.

அதிலும் ஒருசிலர் ராஜேஸ்வரியை தள்ளிவிட்டு உள்ளே சென்று பார்த்தபோது தாமோதரன் இறந்த கிடந்தை கண்டு அதிர்ச்சியுற்றனர். மேலும் தாமோதரனின் உடல் அழுகி வீடு முழுவதும் புழுக்கள் மேய்ந்து கொண்டிருந்தது .

உடனே அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டு செங்கல்பட்டு தாலுகா போலீசார் வரவழைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுக்கா காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

முதல்கட்ட விசாரணையில் தாமோதரன் மீது மிகுந்த அன்பு கொண்டவர் ராஜேஸ்வரி என்பதால் கணவன் இறந்து போனதை தாங்க முடியவில்லை அதனால் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு தாமோதரனின் உடலை தன் கண் முன்னாடியே வைத்துக் பாதுகாத்து வந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

உறவினர் யாருமின்றி இறந்த கணவனின் உடலை வீட்டிலேயே வைத்து நான்கு நாட்களாக பாதுகாத்த மனநிலை பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி யின் பரிதாப நிலை காண்போரை கண்கலங்க வைத்தது

Views: - 25

0

0