சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை திருடி உடம்பில் மறைத்து வைத்த பெண் : காட்டிக் கொடுத்த மூன்றாவது கண்!!

5 July 2021, 4:42 pm
Woman Theft - Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : சூப்பர் மார்கெட் ஒன்றில் மூன்றாம் கண் எனப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா உள்ளதை மறந்து பொருட்களை திருடிய பெண்மணி ஒருவர் வசமாக சிக்கி கொண்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.

காஞ்சிபுரம் சாலை பகுதியில் ஓர் தனியார் சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு நேற்று பிற்பகல் பெண்மணி ஒருவர் தனது 20வயது மதிக்கதக்க மகளுடன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வந்துள்ளார்.

இங்கு தனக்கு தேவையான பொருட்களை தாங்களாகவே எடுத்துகொள்ளும் வகையில் பொருட்கள் காட்சியகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பெண்மணி தனக்கு தேவையான பொருட்களை எடுத்து கூடையில் போட்டார்.

அதில் சில பொருட்களை லாவகமாக எடுத்து உடம்பில் வைத்து மறைத்துள்ளார். பொருட்களை எடுத்துக்கொண்டு பணம் செலுத்த காசாளர் பகுதிக்கு வந்து மறைத்து வைத்த பொருட்களை தவிர மற்ற பொருட்களுக்கான ரசீது போட கொடுத்துள்ளார்.

சுதாரித்து கொண்ட கடை ஊழியர் ஒருவர் அப்பெண்மணி மறைத்து வைத்திருந்தது என்ன என கேட்க அப்பெண்ணியோ தனியே சென்று அப்பொருட்கள் எடுத்துக் இடத்திலேயே வைத்திட முயன்றுள்ளார்.

அவரை விடாது பின்னாலேயே துரத்தி சென்ற கடை ஊழியர் உடம்பில் மறைத்து வைத்திருந்த அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்திட கட் அண்டு ரைட்-ஆக கூறிய நிலையில் திருடிய பொருட்கள் அனைத்தும் வெளிவந்தன.

இதனையெடுத்து அனைத்து பொருட்களையும் பிடிங்கிகொண்டு எவ்வித பொருட்களும் இங்கு இல்லையென கூறி திருப்பி அனுப்பப்பட்ட சிசிவிடி காட்சியானது சமூக வளைதளங்களில் வலம் வந்து கொண்டுள்ளது.

வணிக ஸ்தலங்களில் யாருக்கும் தெரியாமல் லாவகமாக பொருட்களை திருடி செல்லாம் என்று எண்ணுபவர்கள் மூன்றாம் கண் எனப்படும் சிசிடிவி கேமராவை கவனிக்காமல் மாட்டிக் கொள்கின்ற சம்பவம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

பலர் மத்தியில் திருடி என்ற பட்டமும் அவருக்கு சூட்டப்பட்டு கூனிக்குறுகி செல்ல வேண்டிய அவலநிலை ஏற்படுவதால் இது போன்ற ஈனச் செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என சமூக ஆர்வலர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.

Views: - 193

0

0