வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த பெண்.. வெளியே சென்ற கணவர்… உள்ளே நுழைந்த மர்மநபர் : ஷாக் சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2024, 1:26 pm

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் சொசைட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(48) மனைவி சுகுணா(43) நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு தூங்கி உள்ளனர்.

இன்று அதிகாலை 5மணி அளவில் கணவர் நந்தகுமார் நடைப்பயிற்சி செல்வதற்காக வீட்டின் கதவை திறந்து வெளிய சென்றதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த மர்ம நபர் வீட்டின் உள்ளே புகுந்து உறங்கிக் கொண்டிருந்த நந்தகுமார் மனைவி சுகுணா அணிந்திருந்த 8 பவுன் (தாலி)செயினை பறித்துச் சென்றதாகவும், தூக்கத்திலிருந்து விழித்த சுகுணா கூச்சிலிடுவதற்குள் மர்ம நபர் வீட்டில் இருந்து வெளியே ஓடியதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக வெண்ணந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் சுகவனம் சம்பவம் தொடர்பாக பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டும்,வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!