ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வாலிபர் : பொய்வழக்கு போட்டு போலீசார் துன்புறுத்துவதாக புகார்!!

By: Udayachandran
2 January 2021, 6:41 pm
Madurai Suicide Attempt -Updatenews360
Quick Share

மதுரை : பொய்வழக்கு புனைந்து காவல்துறையினர் துன்புறுத்தியதோடு, வீட்டை சேதப்படுத்தியதாக இளைஞர் தீக்குளிக்க முயன்றதால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை பீபீகுளம் முல்லைநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா என்கிற ராஜசேகர் (வயது 26).இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய தாய் தல்லாகுளம் பெருமாள் கோவில் பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது தாயுடன் வந்த ராஜசேகர் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இந்நிலையில் பாதுகாப்புபணியில் இருந்த போலீசார் ராஜசேகரை மீட்டு உடலில் தண்ணீரை பீய்ச்சி தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து அவர் தன் மீது தல்லாகுளம் காவல்துறையை சேர்ந்த முத்துக்குமார் என்ற காவலர் அடிக்கடி பொய் வழக்குகள் பதிவுசெய்து துன்புறுத்துவதாகவும், தனது வீட்டை காலையில் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக கூறி புகைப்படங்களை காண்பித்தார்.

தனது தாயையும், தன்னையும் வேலை செய்ய விடாமல் ஆட்கள் கிடைக்காத வழக்குக்கு தன் பெயரை சேர்ப்பதாக கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்த காவல்துறையினர் தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு இளைஞர் ராஜசேகரை குடும்பத்துடன் அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் பொய் வழக்கு போட்டு வாழ விடாமல் செய்வதாக இளைஞர் ஒருவர் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தல்லாகுளம் காவல்துறையினரிடம் கேட்ட போது ராஜசேகர் பெரிய ரவுடி எனவும், இவர் மீது 20 வழக்குகள் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Views: - 35

0

0