வாக்கு இயந்திரங்கள் வைத்துள்ள தனியார் கல்லூரியில் அத்துமீறி நுழைந்த இளைஞர்.. விசாரணையில் திக்திக்..!!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2024, 1:04 pm

வாக்கு இயந்திரங்கள் வைத்துள்ள தனியார் கல்லூரியில் அத்துமீறி நுழைந்த இளைஞர்.. விசாரணையில் திக்திக்..!!

தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி அருகே கொடுநார்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது

தனியார் கல்லூரியில் தனி அறையில் சிசிடிவி கண்காணிப்புடன் மத்திய ரிசர்வ் போலீசார் மற்றும் தேனி மாவட்ட போலீசார் என பலத்த பாதுகாப்பு போடப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது

இந்நிலையில் தேனியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவர் வாக்குப்பெட்டி வைத்திருக்கும் தனியார் கல்லூரியில் அத்துமீறி உள்ளே நுழைய முயன்றதாக கூறப்படுகிறது

இதை அடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் அவரை தடுத்து நிறுத்தி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் அந்த இளைஞரை ஒப்படைத்தனர்

மேலும் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வாக்குப்பெட்டி வைத்துள்ள தனியார் கல்லூரியில் அத்துமீறி நுழைந்ததாக கூறி அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்

மேலும் படிக்க: மதுரை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுடன் JAPAN டூர் போன திமுகவினர்.. VIRAL போட்டோஸ்!

இந்நிலையில் அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் ராஜேஷ் கண்ணன் என்றும் அந்தக் கல்லூரியில் முன்னாள் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது

இதனை அடுத்து கல்லூரி வளாகத்தை சுற்றி போலீசார் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!