பள்ளி முடிந்து வெளியே வந்த மாணவியை சரமாரியாக தாக்கிய இளைஞர்… ஒரு தலைகாதலால் நடந்த விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 July 2023, 11:41 am

திருப்பூர், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் படிக்கும் தனது தங்கையை அழைத்து வர மாதேஷ் என்ற வாலிபர் வினோத்குமார், தாமஸ்குட்டி உள்ளிட்ட தனது நண்பர்களை அழைத்து சென்றுள்ளார்.

முன்னதாக, வினோத்குமார் பிறந்தநாளை முன்னிட்டு அனைவரும் மது அருந்தியுள்ளனர். இந்நிலையில் மாதேஷ், தனது நண்பர்கள் வினோத்குமார், தாமஸ்குட்டி தனது தங்கையை பள்ளியிலிருந்து வெளியில் அழைத்து வரும் போது உடன் வந்த தாமஸ்குட்டி அங்கு வந்த பள்ளி மாணவி ஒருவரை தாக்கி விட்டு தப்பி உள்ளார்.

இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடன் சென்ற மாதேஷ், வினோத்குமார் இருவரையும் பிடித்து தாக்கினர். இதில் இருவருக்கும் ரத்த காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு போலீசார் இளைஞர்களை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட விசாரணையில், தாமஸ்குட்டி அப்பள்ளியில் படிக்கும் மாணவியை விரும்பியதாகவும், இதுதொடர்பாக பள்ளி மாணவியை தாக்கியதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் பள்ளி மாணவியை தாக்கி விட்டு தப்பி ஓடிய தாமஸ் குட்டியை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • coolie second single monica song release on 11th july மோனிகாவாக மோகினி ஆட்டம் ஆடப்போகும் பூஜா ஹெக்டே? கூலி படத்தின் இரண்டாவது சிங்கிள் அப்டேட்!