திரையரங்குகளை திறக்க வேண்டும் : விக்கிரமராஜா வலியுறுத்தல்!!

11 September 2020, 4:47 pm
Vikkramraja - updatenews360
Quick Share

தூத்துக்குடி : தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க வேண்டும், குற்றலாம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், தங்குவதற்கும் அரசு அனுமதிக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரரமைப்பு தலைவர் விக்கிரமராஜா குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் மற்றும் திரையரங்குகள் திறப்பது பற்றி கோரிக்கை மனு அளித்தார்

இதனை தொடர்ந்து விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் பேசிய குற்றலாம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், தங்குவதற்கும் அரசு அனுமதிக்க வேண்டும்,குற்றலாம் சீசன் முடிய 3 மாத அவகாசம் இருக்கிறது. சுற்றுலா பயணிகள் குளிக்க, தங்குவதற்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் அதனை நம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான வணிகர்கள் வாழ்வாதரம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது, எனவே உடனடியாக அரசு அனுமதி அளிக்க வேண்டும்,குற்றலாத்தில் தரை கடைகளில் வாடகை 70சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனை குறைக்க வேண்டும்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினை காரணம் காட்டி 550 கடைகளை காலி செய்ய நெல்லை மாநகராட்சி முயற்சி செய்கிறது. எனவே பாளையங்கோட்டை மார்க்கெட் வியாபாரிகளை வணிகம் செய்ய அனுமதிக்க வேண்டும்,தமிழகம் முழுவதிலும் திரையரங்குகளை உடனடியாக அரசு திறக்க வேண்டும், திரையரங்குகளை திறந்தால் மட்டுமே அதன் நம்பி வாழும் வணிகர்கள் வாழ்வாதரம் பாதிக்கப்படமால் இருக்கும் என்றார்.

Views: - 0

0

0