7 மாதத்திற்கு பிறகு திரையரங்குகள் திறப்பு : டிக்கெட் விலை குறைப்பு!!

Author: Udayachandran
15 October 2020, 1:01 pm
Pondy Cinema Theatre Open - Updatenews360
Quick Share

புதுச்சேரி : 5ஆம் கட்ட ஊரடங்கு தளர்வை தொடர்ந்து 7 மாதங்களுக்கு பின்னர் இன்று புதுச்சேரியில் மீண்டும் திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்பட்டது.

புதுச்சேரியில் 5ம் கட்ட ஊரடங்கு தளர்விற்கு பின்னர் புதுச்சேரியில் உள்ள சில திரையரங்குகள் மத்திய அரசு வழிகாட்டுதல் படி 7மாதங்களுக்கு பின்னர் இன்று மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டது. திரையரங்குகள் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து பகல் 11.45 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. படம் பார்க்க வந்த ரசிகர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னர் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அரங்கத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஏற்பாடு செய்யப்பட்ட இருக்கைகளில் ரசிகர்கள் அமர்ந்து படம் பார்த்தனர். ரசிகர்களை வரும் வகையில் இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டது. மேலும் ரூ.130க்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் ரூ.100க்கும் இதேபோல் ரூ.105க்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் ரூ.75க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனிடையே திரையரங்குகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து துணை ஆட்சியர் சுதாகர் மற்றும் தாசில்தார் ராஜேஷ் கண்ணா ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். முதல் நாளான இன்று கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைந்த அளவிலான ரசிகர்களே படம் பார்த்தனர்.

புது படங்கள் எதுவும் வெளியாகத நிலையில் சமீபத்தில் வந்த தமிழ் மற்றும் ஆங்கில படங்கள் மட்டுமே திரையிடப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் படி நாள்தோறும் பகல்11.45, மதியம் 3 மணி, மாலை 6.45 ஆகிய 3 காட்சிகள் மட்டுமே காட்சிகள் திரையிடபட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 61

0

0