அப்போ பெரியார்.. இப்போ மோடி : BIO PICல் அதிரடி காட்ட வரும் சத்யராஜ்.!!

Author: Udayachandran RadhaKrishnan
18 May 2024, 2:50 pm
Sathya
Quick Share

அப்போ பெரியார்.. இப்போ மோடி : BIO PICல் அதிரடி காட்ட வரும் சத்யராஜ்.!!

சினிமாவில் அரசியல் தலைவர்களின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்பட்டு வருவது என்பது புதிதான விஷயம் இல்லை.

குறிப்பாக ஏற்கனவே, ஆந்திரா முதலமைச்சார் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்கை வரலாற்று படமும் ‘யாத்ரா 2’ என்ற தலைப்பில் எடுக்கப்பட்டு வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து, பாஜக தலைவர் அண்ணாமலை உடைய வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் கூட தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதனை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடியின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தில் பிரதமர் மோடியின் கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ‘பாகுபலி’ படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சத்தியராஜ் மார்க்கெட் பான் இந்தியா அளவிற்கு உயர்ந்துவிட்டது.

மேலும் படிக்க: அண்டா அண்டாவாக கொட்டி கிடந்த கறி.. ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விநோத அசைவ திருவிழா : வைரல் வீடியோ!

எனவே, பிரதமர் மோடியின் வரலாற்று படம் என்றால் கண்டிப்பாக பிரமாண்டமாக இந்தியாவில் இருக்கும் எல்லா மொழியிலும் பெரிய அளவில் பேசப்படும் வகையில் வேண்டி இருக்கும்.

அதைப்போல, எல்லா கதாபாத்திரங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்த கூடிய சத்யராஜ் இந்த படத்தில் நடித்தால் தான் சரியாக இருக்கும் என அவரிடம் படத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

மோடியின் வாழ்கை வரலாற்று திரைப்படத்தினை பெரிய தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறதாம். விரைவில், இயக்குனர் யார்? படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் யார்? மற்றும் என்பதற்கான கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சத்யராஜ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக உள்ளார்.

இந்த சூழலில் அவர் பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் அவருடைய வாழ்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளதாக பரவும் தகவல் கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. உண்மையில் படம் உருவாகிறதா படத்தில் பிரதமர் மோடியாக நடிக்கிறாரா இல்லையா என்பதை அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

Views: - 147

0

0