நந்தினி வீசிய வலை… ஓடிப்போய் கல்யாணம் செய்த 28 வயது டாக்டர் : ரூ.5 லட்சம் அபேஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
14 May 2025, 6:58 pm

தேனி நகரில் வசித்து வருபவர் 28 வயதான இளைஞர். இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த நந்தினி என்ற பெண் முகநூல் மூலம் அறிமுகமாகி பழகி வந்துள்ளார்

அப்போது தான் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் என்றும் தனக்கு 26 வயது ஆகிறது தான் வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்தி கொண்டு பழகி வந்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கு பிறகு மருத்துவ இளைஞரை காதலிப்பதாக நந்தினி கூறிய போது அதனை ஏற்க மறுத்து, பெண்ணிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்

இதனிடையே மருத்துவருக்கு சில நபர்கள் அடிக்கடி ஃபோன் செய்து உங்கள் மீது போக்சோ வழக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறி மிரட்டியுள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த மருத்துவ இளைஞரை, நந்தினி மீண்டும் தொடர்பு கொண்டு தனக்கு தெரிந்த நண்பர்கள் நந்தகுமார் என்பவர் மாவட்ட நீதிபதி, ரெஹிர்சன் என்பவர் வழக்கறிஞர் மற்றும் சென்னையை சேர்ந்த முருகேசன் என்பவர் பிரபல விஐபிக்களிடம் நல்ல நட்புடன் இருப்பவர் எனவும் அறிமுகப்படுத்தி உங்களின் பிரச்சினை நான் சரி செய்து விடுகிறேன் எனக்கூறி வந்துள்ளார்

இதனிடையே மருத்துவரிடம் டிஎஸ்பி, ஐஜி எனக் கூறி போனில் தொடர்பு கொண்டு போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளதாக மேலும் சிலர் மிரட்டி வந்துள்ளனர். அப்போது நந்தினி தான் உயர் அதிகாரிகளிடம் பேசி உங்களை கைது செய்யாமல் பார்த்துகொள்வதாக மருத்துவ இளைஞரிடம் ஜிபே மூலமாக தவணையாகவும் 5 லட்சமும், ரொக்கமாக 5 லட்சம் பணம் பெற்று வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கிலிருந்து விடுபட வேண்டும் என்றால் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நந்தினி வற்புறுத்தி நந்தினியின் நண்பர்கள் உதவியுடன் மருத்துவ இளைஞரை கடத்திச் சென்று சென்னையில் வைத்து சாலையோர கோயிலில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

பின் அங்கிருந்து தப்பித்த மருத்துவ இளைஞர் தனது வீட்டில் இது குறித்து தெரிவித்து தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

மேலும் தன் மீது எந்த வழக்கும் பதியவில்லை என்று தெரிந்து கொண்ட இளைஞர் நந்தினிக்கு 38 வயது ஆகிறது என்றும் போலி ஆதார் கார்டு தயார் செய்து தன்னிடம் 26 வயது போல் நடித்து தன்னை ஏமாற்றியதாகவும் கூறினார்.

மேலும் நந்தினி மீது கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தப் பெண்ணால் பாதிக்கப்பட்ட கடைசி இளைஞனாக நானாக இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து தேனி காவல் நிலையத்தில் நந்தினி உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்
பணம் பறிக்கும் நோக்கத்தில் திருமணம் ஆகாத இளைஞர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

  • pradeep ranganathan dude title have trouble பிரதீப் ரங்கநாதன் பட தலைப்புக்கு வந்த சிக்கல்? ஸ்டார்ட்டிங்லயே End Card போட்டாங்களே?
  • Leave a Reply