உழைத்த தொண்டர்களுக்கு உரிய மரியாதை இல்லை.. சீமான் மட்டும்தான் கட்சியை வளர்த்தாரா? கொந்தளிக்கும் செயலாளர்!
Author: Udayachandran RadhaKrishnan17 செப்டம்பர் 2024, 5:05 மணி
நாம் தமிழர் கட்சி திருச்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் பிரபு திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த 15 ஆண்டுகளாக உழைப்பு, நேரம், வருவாய் என எங்களால் முடிந்த அனைத்தையும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காக கொடுத்தோம். அதற்கு உரிய மதிப்பில்லை.
எதற்கெடுத்தாலும் என் கட்சி, என் கட்சி என சீமான் பேசுகிறார். சீமான் மட்டுமே நாம் தமிழர் கட்சியை வளர்த்தாரா? ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் எங்கே போவது?
மேலும் படிக்க: நான் என் ஹீரோவை பற்றி தான் பேசுவேன்… வில்லன்களை பற்றி பேசுவது என் வேலை இல்ல : சூடான சு.வெங்கடேசன் எம்பி!
தமிழ்தேசியம், தலைவர் பிரபாகரனை நேசித்து இந்த கட்சிக்கு வந்தோம். தற்போது, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகம் சரியில்லை.
கட்சி அலுவலகம் ஆயிரக்கணக்கான நபர்களின் உழைப்பில் வந்தது. அதை தனி நபரின் பெயரில் பத்திரம் செய்துள்ளனர்.
கட்சிக்கென சட்ட, திட்டம் ஏதும் இல்லை. 15 ஆண்டுகளாக உழைத்தவர்களை விடுத்து, யாரோ ஒருவரை கொண்டு வந்து இவர்தான் வேட்பாளர் என சொல்வது எந்த விதத்தில் நியாயம்? என தெரிவித்துள்ளார்.
0
0