இந்தியாவிலேயே திமுக இருக்கக் கூடாது.. 24 மணி நேரத்தில் 10 படுகொலை : நயினார் நாகேந்திரன் காட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2025, 6:53 pm

திருச்சி பாஜக நிர்வாகி இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகிறார். தூத்துக்குடி விமான விரிவாக்க நிலையத்தை திறந்து வைத்து 4,500 கோடி ரூபாய்க்கு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

அதனை தொடர்ந்து மறுநாள் திருச்சி வந்து தங்குகிறார். பின்னர் ஜெயங்கொண்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் கோவில் பார்வையிட்டு கலை, கலாச்சார விழாவில் கலந்து கொள்கிறார்.

பல்வேறு நாடுகளை கைப்பற்றியவர் ராஜேந்திர சோழன், அவர் போல உலகெங்கும் சென்று வெற்றி வாகை சூடும் நபராக பிரதமர் மோடி இருக்கிறார்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நன்றாக உள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியது குறித்த கேள்விக்கு, இரண்டு தினங்களுக்கு முன்பு திருவள்ளுவர் மாவட்டத்தில் 24மணி நேரத்தில் 10 படுகொலை நடந்துள்ளது. 10வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வழக்கு பதிவு செய்யவில்லை.

லாக்கப் டெத் நடக்கிறது. ஏழு பவுன் நகைக்காக வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். யாருக்காக சொல்கிறார் கே எஸ் அழகிரி, சட்ட ஒழுங்கு சரியாக உள்ளதா ? இதெல்லாம் அவர் வீட்டில் நடந்தால் அவருக்கு தெரியும்.

தமிழக முதல்வர் எனக்கு நெருங்கிய நண்பர் எனது தொகுதிக்கு பொதுமக்கள் கோரிக்கைகளை செய்து கொடுத்துள்ளார். அவர் பூரண நலம் பெற வேண்டுகிறேன். மருத்துவமனையில் இருந்து கோப்புகளை பார்க்கிறார் என்றால் அதனை வரவேற்கிறேன்.

உங்களுடன் முதல்வர் திட்டத்தை அரசு அதிகாரிகளை கொண்டு நடத்துகின்றனர். அரசு அதிகாரிகள் கண்டிப்பாக ராஜினாமா செய்து இருக்க வேண்டும்.

ஜாதி வாரி கணக்கெடுப்பு போன்று 2கோடி பேரை சேர்த்துள்ளனர் என திமுக கூறுகிறது. தமிழக முதல்வர் வந்தால் கொடி ஊன்றுவதும், மற்ற கட்சி தலைவர்கள் வந்தால் கொடியை அகற்றுவதும் திமுக ஆட்சியில் நடக்கிறது. என்னை பொருத்தவரை திமுக இந்த நாட்டில் இருக்கக் கூடாது.

குர்ஆன் மீது ஆணையாக பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துக்கு, அது அவருடைய தனிப்பட்ட கருத்து குர்ஆன், பகவத்கீதை போன்ற வற்றை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது என தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!