மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல் கூடாது : திருமாவளவன் வேண்டுகோள்..!
Author: Udayachandran RadhaKrishnan10 May 2025, 7:01 pm
விசிக கட்சி திருச்சியில் மே-31 நடத்த உள்ள “மதசார்பின்மை காப்போம்” என்ற பேரணி குறித்து வேலூர்,88o திருப்பத்தூர், ராணிப்பேட்டை,9 திருவண்ணாமலை உள்ளடக்கிய மாவட்ட மண்டல செயற்குழு ஆலோசனை கூட்டம் வேலூர் உள்ள தனியார் திருமண மண்டப்பத்தில் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று கட்சியினருடன் ஆலோசனை நடத்தினர்.
இதையும் படியுங்க: இந்தியா – பாக் போர் நிறுத்தம்.. சமாதானம் செய்த அமெரிக்கா : பேச்சுவார்த்தை தொடரும்..!
முன்னதாக பேட்டியளித்த திருமாவளவன் ” 2026 தேர்தல் பொறுத்தவரை தற்போது ஒரே ஒரு அணிதான் உள்ளது. அது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி.
அதிமுகவை பொறுத்தவரை அது உறுதிபடாத கூட்டணியாக உள்ளது. அந்த அணியில் வேறு யார், யார் கூட்டணி போடபோகிறார்கள் என்பது தெரியவில்லை,
இஸ்லாமியர்கள் இந்தியர்கள்தான், இந்த மண்ணின் மைந்தர்கள். பயங்கரவாத எதிரான தாக்குதலை இஸ்லாமியர்களும் வரவேற்கிறார்கள். மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல், சமூக பிரிவனைவாதம் கூடாது என கூறினார்.