எனது அரசில் வெளிப்படைத்தன்மையிருக்கும் : அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!!

13 May 2021, 6:23 pm
Stalin Govt - Updatenews360
Quick Share

எனது தலைமையிலான அரசில் வெளிப்படைத்தன்மையிருக்கும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கொரோனா குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க அனைத்து கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, பாஜக, சிபிஎம்,சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், போர்க்கால அடிப்படையில் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எனது தலைமையிலான அரசில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என கூறினார்.

அனைத்து கட்சியின் ஆலோசனையை பெறவே இந்த கூட்டத்தில் இணைந்திருக்கிறோம் என்றும், முழு முடக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்தி அரசின் உத்தரவுகளை மீறுகின்றனர் என பேசினார்.

Views: - 78

0

0