கோடி ரூபாய்க்காக கட்சியை அடமானம் வைச்சிருக்காங்க.. ஆதாரத்துடன் செல்லூர் ராஜு குற்றச்சாட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2023, 1:57 pm

மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் அமைந்துள்ள தமிழன்னை சிலைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும் போது, திமுக மொழிப்போர்
தியாகிகளுக்கு வீரவணக்கம் கொண்டாட உள்ளோம் என்று அறிவித்துள்ளார்கள். தமிழ் மொழிக்காக அவர்கள் எதுவும் செய்ததில்லை. போட்டிக்காக கோயம்புத்தூரில் செம்மொழி மாநாடு நடத்தினார்கள் முழுக்க முழுக்க திமுக குடும்பம் தான் அந்த மாநாட்டில் இருந்தது. அந்த மாநாட்டை உலக தமிழ் சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.

நீட் தேர்வை ரத்து செய்வதற்காக நாங்கள் பல்வேறு வகையில் பாடுபட்டோம் தற்போது முடியாத சூழ்நிலையில் உள்ளோம்.

திமுகவும் காங்கிரஸ் இயக்கமும் தான் நீட் தேர்வை கொண்டு வந்தது. உச்சநீதிமன்றத்தில் வாதாடியது திமுக கூட்டணி கட்சியில் இருக்கும் பா சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தான் வாதாடி நீட் தேர்வை நிரந்தரமாக வருவதற்கு காரணமாக இருந்தவர்.

கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளர் மக்களின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்து ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றியது அதிமுக.

அனிதா என்ற மாணவி இறந்ததற்கு வைகோ, திருமாவளவன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காளர்கள் போராட்டம் செய்தார்கள். தற்போது 12 பேர் இந்த திமுக ஆட்சிக் காலத்தில் இறந்துள்ளார்கள்.

அவர்களை பற்றி யாராவது பேசுகிறார்களா?வைகோ இது குறித்து பேசுகிறாரா?இந்த இந்த திமுக அரசை கண்டித்து யாராவது பேசுகிறார்களா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.நீட் தேர்வில் அன்றைய தினம் வாய்மூடி மௌனமாக இருந்தது திமுக.

நாடாளுமன்றத்தில் 39 பேர் திமுக கூட்டணியில் இருக்கிறார்கள். ஒன்றும் செய்யாமல் அமர்ந்திருக்கிறார்கள். நீட் தேர்வுக்காக பாராளுமன்றத்தை இதுவரை இவர்கள் முடக்கி இருக்கிறார்களா?

48 நாட்கள் காவிரி பிரச்சனைக்காக எங்கள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினார்கள். திமுக இன்று வேஷம் போட்டு நாடகம் ஆடி கொண்டிருக்கிறது. வாரிசு அரசியலை நடத்தி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்காக கோடி ரூபாய்காக தங்களது கொள்கைகளை அடமானம் வைத்திருக்கக்கூடிய கம்யூனிஸ்டுகள். இனிமேல் உணர்ச்சி வந்து நல்லது செய்ய குரல் கொடுக்க வேண்டும் என எண்ணுகிறோம்.

நாளை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக இரண்டு சீட்டு மூன்று சீட்டு மற்றும் கோடி ரூபாய்க்காக தங்கள் கொள்கைகளை அடமானம் வைத்திருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சிகள். மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் கூட்டத்தில் ஆவது இனிமேல் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!