கேள்வி கேட்டா மிரட்டறாங்க… பாராட்டு பத்திரம் வாசிக்கும் இடமாக மாறிவிட்டது : கனிமொழி எம்பி குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2023, 2:45 pm

தூத்துக்குடி-யில் நடைபெற்ற தமிழ் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கலை இலக்கிய விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன்,ஆகியோர் எழுத்தாளர் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினர்

இந்த கலை இலக்கிய விருது வழங்கும் விழாவில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விருதுகளை வழங்கிய பின்னர் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி பேசுகையில், நாடாளுமன்றம் என்பது இன்று கேள்விகள் கேட்கக்கூடாத இடமாகவும் வெறும் பாராட்டு பத்திரங்களை மட்டுமே படிக்க கூடிய இடமாக மாறி வருகின்றது.

நாடாளுமன்றம் என்பது மக்களுடைய பிரச்சினைகள், குறைகள்,அச்சத்தினை எடுத்துரைக்கும் விதமாக இருக்க வேண்டும் ஆனால் கேள்வி நேரத்தில் கூட மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச முடியாத நிலை நாடாளுமன்றத்தில் உள்ளது.

மதுரையில் அமைந்து வரும் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த நிலை என்ன என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சரிடம் கேள்வி கேட்டால் அவர் அச்சுறுத்தும் விதமாக பதில் அளிக்கின்றார்.

சுறுக்கு கயிறு உங்கள் கழுத்தை நெறிக்கும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு கேள்விக்கு பதில் சொகின்ற அளவிற்கு ஒரு அமைச்சர் பதில் சொல்கின்றார் என்றால் நாட்டின் ஜனநாயகத்தின் நிலை என்னவாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றத்தில் பல அரசியல் இயக்கங்களும் எதிர்கட்சியினரும்,மக்கள் பிரதிநிதிகளும் பிரதமரை நோக்கி கேள்வி கேட்டால் அவர் தரக்கூடிய ஒரே பதில் எதிர்கட்சிகளை சாடுவது எந்த கேள்விக்கும் பதில் கூறாமல் கேள்வி கேட்பதே தவறு என்பதுபோல் கேள்வி கேட்பவர்களை குறைத்து பேசுவது நையாண்டி செய்வது, மிரட்டுவது, அச்சுறுத்துவது போன்ற செயல்களை நாடாளுமன்றத்தில் நாங்கள் பார்த்துகொண்டு இருக்கின்றோம்.

மத்திய அரசை எதிர்த்து மீடியாக்களோ,எழுத்தாளர்களோ கேள்வி கேட்க முடியாத நிலையில் உள்ளது அதைபோல் அரசின் தவறுகளை சுட்டிகாட்டுவது போன்ற ஒரு திரைப்படம் எடுத்தால் கூட அதனை வெளியிட முடியாத நிலை உருவாகி உள்ளது.

இன்று இந்தியா என்பது ஒருவர் அந்த ஒருவர் யார் என்றால் அது பிரதமர்
இந்தியாவின் ஒட்டுமொத்த பிம்பம் என்பது அவராகதான் இருக்க வேண்டும் என்ற நிலையே உருவாக்க துடித்து கொண்டு இருக்கின்றார்கள்.

பிரதமர் மோடிக்கு பின்னால் இருக்கக்கூடிய ஒருவர் யார் என்ற கேள்வியை இன்று நாடே கேட்டுகொண்டு இருக்கின்றது ஆனால் பதில் மவுனம்.
அரசியல் மட்டுமின்றி பதவிகள், ஆளுமை, பொருளாதாரம் என்பது கூட அவர்களது கையில் பறித்து வைத்துகொள்ள கூடிய ஒன்றாக மாறிவிட வேண்டும் என்ற அந்த நிலையை நம்மை தள்ளி கொண்டு இருக்கின்றார்கள்.

இந்த நிலையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய ஒன்றாக எழுத்தும், கலையும்தான் கேள்விகளின் விதைகளாக இருக்க முடியும் இந்த கேள்விகளை நாம் ஒவ்வொரு ஊராக சென்று மக்களிடம் சென்று கேட்க வைக்க வேண்டும் அது ஒன்றுதான் மாற்றத்தினை உருவாக்கும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!