ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம் : புதுச்சேரி முதலமைச்சருக்கு திருமா நேரில் வாழ்த்து!!

2 January 2021, 12:28 pm
Thiruma Meet CM Narayanasamy -Updatenews360
Quick Share

புதுச்சேரி : தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம் என அரசாணை வெளியிட்ட புதுச்சேரி முதலமைச்சரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்து வாழ்த்து கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமியை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அமைச்சர் கந்தசாமி, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உடனிருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், புதுச்சேரியில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம் என மாநில அரசு அரசனை பிறப்பித்து உள்ளது இதற்காக முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாகவும் இலவச கல்வி திட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டிய உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும் வரும் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சனாதன சக்திகளை கால் ஊன்ற விடாமல் இருக்க உறுதி ஏற்போம் என்றும் இந்த ஆண்டு அதற்கான ஆண்டாக மலரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.

Views: - 0

0

0