இந்துப் பெண்களை விடுங்க, உங்க சமுதாயப் பெண்கள் எப்படி? ஷ்யாம் கேட்ட கேள்வியால் ஷாக் ஆன திருமா!!

24 October 2020, 12:59 pm
Shyam Krishnaswamy - Updatenews360
Quick Share

தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை சாடாத மக்களே இல்லை. காரணம் பெண்களை இழிவான சொற்களால் அவர் பேசியதுதான்.

பெண்கள் அடிப்படையில் கடவுளால் பரத்தையர்களாக படைக்கப்பட்டவர்கள் என அவர் பேசியது தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இந்து மதப்படி அனைத்து பெண்களும் விபச்சாரிகளாக படைக்கப்பட்டவர்கள் என இந்து மதம் கூறுவதாக விமர்சித்துள்ளார்.

Manusmriti row: VCK leader Thirumavalavan booked for comment | The News  Minute

ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள் என்றும், அனைத்து அடிமட்ட பெண்களுக்கும் இது பொருந்தும் என்றும், இந்து மதம் கூறுவதாக திருமாவளவன் கூறி அதற்கு கண்டனமும் தெரிவித்தார்.

இதனால் திருமாவளவனுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது. அனைத்து அரசியல் கட்சிகள் முதல் அடிமட்ட மக்களில் இருந்து எதிர்ப்புகளும் கண்டனமும் கிளம்பியது. இதையடுத்து திருமாவளவன் மீது பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அஸ்வத்தாமன் புகார் அளித்துள்ளார்.

Thol Thirumavalavan: More than 95 Dalits were not allowed to vote in TN

இந்திய அரசியல் அமைப்பு சட்டபப்டி பதவி பிரமாணம் எடுத்து ஒரு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் யாரும் ஒரு மதத்தை பற்றி அவதூறுகள் பேசக் கூடாது என்றிருந்தும், திருமா எப்படி இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுகிறார் என எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

பேஸிக் சென்ஸே இல்ல... எத கேட்டாலும் அனிதானு வந்தர்ராங்க... கிருஷ்ணசாமி  மகனின் நக்கல் ட்வீட்!!

இதையெல்லாம் மீறி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் மகனான ஷ்யாம் கிருஷ்ணசாமி, திருமாவளவனை கடுமையாக விமர்சித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் இந்துக்களை விடுங்க சார், உங்க சமுதாய சனாதனத்தை ஏற்றுக்கொள்ளாததால் ஒதுக்கிவைத்து விட்டார்களே உங்கள் சமுதாய பெண்கள், அதே சமுதாய ஆண்களால் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

சாட்டையடி கேள்வியை கேட்டுள்ள ஷ்யாம் கிருஷ்ணசாமிக்கு, திருமாவளவன் பதில் சொல்லுவாரா என எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் நெட்டிசன்களும் திருமாவளவனை கடுமையாக சாடி வருகின்றனர். மனிதன் என்றால் கேட்கும் கேள்விகள் நிச்சயமாக உரைக்கும் என திருமாவளவனுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், மக்கள் மத்தியில் சனாதனத்தை பற்றி பேசி, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள திருமாவளவன் இனி என்ன செய்யப்போகிறார் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

Views: - 83

0

0