திமுக கூட்டணியை விட்டு திருமாவளவன் வெளியேற வேண்டும் : நயினார் நாகேந்திரன் விருப்பம்!!
Author: Udayachandran RadhaKrishnan22 May 2025, 2:28 pm
பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியவை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒன்றிணைய வேண்டும். பா.ஜ.க. கூட்டணியில் அவர்கள் தொடர வேண்டும். அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.வை வீழ்த்த ஒன்றிணைய வேண்டும்.
இதையும் படியுங்க: பைனான்சியர்களுடன் உல்லாசம்.. வீடியோ எடுத்து பணம் பறிக்கும் கும்பல் : பெண் உட்பட 3 பேர் கைது!!
அன்புமணி-ராமதாஸ் பிரச்சனைக்குப் பின்னால் பா.ஜ.க. இல்லை. அன்புமணிக்குப் பின்னால் பா.ஜ.க. இருப்பதாகக் கூறுவது தவறு. நாங்கள் யாருக்கும் பின்னால் இல்லை.
பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி உடையும் என்பது திருமாவளவனின் எண்ணம். தி.மு.க. கூட்டணியிலிருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பது எனது விருப்பம். 2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் கூட்டணியை மட்டுமே நம்பியுள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்களை அவர் நிறைவேற்றவில்லை. சொத்து வரி, மின் கட்டண உயர்வு போன்றவற்றால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 10 மாதங்களில் மின் கட்டணத் திட்டத்தை நிறைவேற்றாவிட்டால், வரவிருக்கும் பா.ஜ.க. ஆட்சியில் அது நிறைவேற்றப்படும்.
புதிய திட்டங்கள் கொண்டு வரும்போது எதிர்ப்புகள் இருக்கும். ஆதார் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டபோதும் சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்பட்டது, ஆனால் இப்போது நடைமுறையில் உள்ளது.
அதேபோல், தங்க நகைக் கடனுக்கான விதிமுறைகளும் சிக்கல்கள் இன்றி நடைமுறைக்கு வரும். என்.ஆர்.சி. சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டு வரப்படவில்லை. அண்டை நாடுகளிலிருந்து மேற்கு வங்கம் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் உள்ள எந்த இஸ்லாமியர்களுக்கும் இந்தச் சட்டத்தால் பாதிப்பு இல்லை என்று அவர் தெரிவித்தார்.
