எப்போதும் குழப்பத்தில் இருக்கும் திருமாவளவன் ஒரு சமூக விரோதி : ஹெச்.ராஜா விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2021, 4:07 pm
Thiruma And H Raja - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : திமுக தேர்தலில் கூறிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. நீட்டை ரத்து செய்துவிடுவோம் என திமுக கூறியது அவர்கள் சக்திக்கு அப்பாற்பட்டது மத்திய அரசே நினைத்தாலும் இனி நீட்டை ரத்து செய்ய முடியாது என எச்.ராஜா கூறியுள்ளார்.

திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் மற்றும் பாஜகவினர் 300க்கும் மேற்பட்டோர் மாங்கரை தெருவில் புதிதாக அமைந்த டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டு தங்கியிருந்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா கைதானவர்களை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கடந்த 2ஆம் தேதி கிராமசபை கூட்டத்தில் மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இருப்பினும் மதுபானகடை அகற்றப்படாததால் போராட்டம் நடைபெற்றது. ஒரு சமயத்தில் சாலைகளில் நாம் இருவர் நமக்கு இருவர் நமக்கு ஒருவர் என எழுதப்பட்டிருந்தது. தற்போது பார்த்தால் அனைத்து இடங்களிலும் குழந்தை வேண்டுமா சோதனை குழாய் குழந்தை என பெயர் பலகைகள் நிறைந்துள்ளது.

1967 க்குப் பின் தான் கலைஞர் கருணாநிதி நான் மதுபான கடையை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். சாராயக்கடை, தற்போது வெளிநாட்டு மதுபானம் என மதுபான கடைகள் வந்துவிட்டன.

இந்த மதுபான கடைகளால் அவனவன் தனக்கு பிள்ளை பெற்க முடியாமல் போய்விட்டது. ஆகையால் மதுபானக் கடைகளை முழுவதுமாக அகற்றி அவனவன் பொண்டாட்டிக்கு அவனவன்பிள்ளை பெற்றெடுக்க தமிழக முதல்வர் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

திமுக தேர்தலில் கூறிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. நீட்டை ரத்து செய்துவிடுவோம் என திமுக கூறியது அவர்கள் சக்திக்கு அப்பாற்பட்டது. மத்திய அரசே நினைத்தாலும் இனி நீட்டை ரத்து செய்ய முடியாது . அதே போல் எல்லா குடும்பத்தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொன்ன வாக்குறுதி என்ன ஆயிற்று? என குற்றம் சாட்டினார்

மேலும் அதிமுகவில் உள்ள குழப்பத்திற்கும் சசிகலா மீண்டும் அரசியல் பிரவேசம் அடைவதற்கு பாரதிய ஜனதா கட்சி ஒரு அங்கமாக உள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார் என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதிற்கு, தொல்.திருமாவளவன் அவரே குழப்பத்தில் தான் இருப்பார். யார் அந்த திருமாளவன், சரக்கு மிடுக்கு பேச்சுகாரர் தானே.. திருமாளவன் ஒரு சமூக விரோதி என பேட்டியளித்தார்.

Views: - 240

0

0