லட்சுமி டீச்சருக்கு காதல் பாடம் சொல்லிக் கொடுத்த கணக்கு வாத்தியார் : தப்புக் கணக்கு போட்டதால் விபரீதம்!!
2 February 2021, 5:51 pmதிருப்பத்தூர் : நாட்றம்பள்ளி அருகே ஆசிரியர் சிவகுமார் கொலை வழக்கில் 7 கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பெண் ஆசிரியரின் கள்ளத்தொடர்பால் கூலிப்படை வைத்து கொடூரமாக கொலை செய்த கணவன் சிக்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பந்தரபள்ளி ஊராட்சி பங்களாமேடு ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதியில் கடந்த 29ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் 37 வயது மதிக்கத்தக்க ஆண் கை, கால் கட்டப்பட்டு தலை நசுங்கிய நிலையில் சடலமாக கிடப்பதாக நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு ரத்தவெள்ளத்தில் தலை நசுங்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது யார் என்ற விசாரணையில் ஈடுப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட எஸ்பி விஜயகுமார் தீவிர விசாரணையில் ஈடுபட்டார்.
அப்பொழுது அவருடைய முதுகில் இருந்த பேக் (BAG) ஒன்றை எடுத்தனர். அதில் கணக்கு புத்தகம் மற்றும் ஐடி கார்டு இருந்தன. அதனை பறிமுதல் செய்து விசாரணையை மேற்கொண்டனர். அப்பொது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் பகுதியைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரி கணித ஆசிரியர் சிவக்குமார் (வயது 37) என்பது தெரியவந்தது
அதன்பின் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலையாளிகளை பிடிக்க மாவட்ட எஸ்பி விஜயகுமார் உத்தரவின்பேரில் வாணியம்பாடி டி.எஸ்.பி பழினி செல்வம் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணையில் இறங்கினர்
அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் இருந்து பைரவி என்ற மோப்ப நாயை வரவழைத்தனர். பல்வேறு பகுதிகளில் சென்ற மோப்ப நாய், சடலமாக கிடந்த பகுதியிலிருந்து அருகாமையில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் மோப்ப நாய் ஓடிச் சென்றது.
மேலும் வேலூர் மாவட்டத்தில் இருந்து கைரேகை நிபுணர் பாரியை வளைத்து தடயங்களை சேகரித்து போலீசார் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வந்தனர். சிவகுமாருக்கு திருமணமாகி விக்டோரியா என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் இருந்தது தெரியவந்தது.
முதல்கட்டமாக மனைவி விக்டோரியாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில் அதன் பின்னர் சிவக்குமாரின் செல்போன் எண்களை ஆய்வு செய்தனர். அதில் அதிக அளவில் 2 ஆசிரியர்களிடம் பேசியது தெரியவந்தது. கள்ளக் காதலாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஜோதி நகர் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் சிவக்குமார் உடன் பணியாற்றும் அறிவியல் பெண் ஆசிரியர்ருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளக்காதல் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி செல்போனில் அதிக நேரம் பேசி வந்துள்ளது தெரியவந்தது.
அதன்பின் காவல் துறையினர் பெண் ஆசிரியர் லட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஆசிரியர் சிவக்குமார் என்பவருக்கும் லட்சுமிக்கும் இடையே கடந்த இரண்டு வருடங்களாக கள்ளக்காதல் ஏற்பட்டு பல்வேறு பகுதிகளுக்குச் சென்று உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது.
இதற்கிடையில் இந்த சம்பவம் லட்சுமியின் கணவர் இளங்கோவுக்கு தெரியவந்தது. இளங்கோ பலமுறை மனைவியை எச்சரித்துள்ளார். ஆனால் கணவர் போட்ட கணக்குகளை விட ஆசியரின் காதல் கணக்கு, ஆசிரியர் லட்சுமியின் கண்ணை மறைத்துள்ளது.
இரண்டு பேருக்கும் கள்ளக்காதல் நீண்டு கொண்டே வந்துள்ள நிலையில் கடந்த தீபாவளியன்று இளங்கோ சிவக்குமாரிடம் கண்டித்துள்ளார் இருப்பினும் சிவக்குமார் எதையும் ஏற்காமல் லட்சுமியிடம் பழகி வந்துள்ளார்
இதனால் ஆத்திரமடைந்த இளங்கோ அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து ஊத்தங்கரை பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளரான கூலிப்படை தலைவன் வெள்ளைச்சாமி இடம் அணுகியுள்ளார்.
அப்பொழுது அவரிடம் 1 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுத்து சிவக்குமாரை தீர்த்துக் கட்ட வேண்டும் என கூறியுள்ளார். அதன் பின்னர் வெள்ளைச்சாமி, ஆசிரியர் சிவக்குமாரை தீர்த்துக்கட்ட உத்தங்கரை பகுதியில் உள்ள ஸ்கார்பியோ காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அவருடன் காரின் உரிமையாளர் கணேசன் என்பவரையும் அழைத்து கொண்டு வெள்ளைச்சாமியின் ஈச்சர் லாரியையும் அவருடன் ஏழு பேர் கொண்ட கூலிப்படையை வைத்துக்கொண்டு கடந்த 29ஆம் தேதி சிவக்குமார் வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும் பொழுது அவரை காரில் கடத்தி கொண்டு பின்னர் அவருடைய இரு சக்கர வாகனத்தை ஈச்சர் லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.
அப்பொழுது சிவக்குமாரை காரில் பலமாக தாக்கி உள்ளனர் இதில் மயங்கிய நிலையில் இருந்த சிவக்குமாரை கை மற்றும் காளைகட்டி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று அவரை கொலை செய்ய திட்டம் தீட்டி திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் சென்றுள்ளனர்.
அப்போது அவரை அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் வீசி சென்று விடலாம் என முடிவு செய்து உள்ளனர் ஆனால் அந்த பகுதியில் ரயில் எதுவும் வராத நிலையில் அங்கு ஆட்கள் வந்த நிலையில் அங்கிருந்து அவரை காரில் எடுத்துக்கொண்டு சிறிது தூரத்தில் வந்து கீழே தூக்கி வீசி பின்னர் ஈச்சர் லாரி மூலமாக தலைமீது ஏற்றுக்கொண்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிய கும்பல் ஊருக்குச் சென்று உள்ளனர் என கொலை செய்த கூலிப்படையினர் கூறியுள்ளார்…
இந்த நிலையில் கொலைக்கு பயன்படுத்திய ஸ்கார்பியோ கார் மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். கொலை செய்த கூலிப்படையினர் 7 பேருடன் லக்ஷ்மியின் கணவரும் முதல் குற்றவாளியுமான இளங்கோவை (வயது 42) கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதில் தலைமறைவா உள்ள மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கள்ளக்காதல் தொடர்பால் அரசுப் பள்ளி ஆசிரியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தையும் படிப்பினையும் கற்றுத் தர வேண்டிய நிலையில் தற்பொழுது ஆசிரியர்கள் இருவர் கள்ளக்காதல் ஏற்பட்டு அதில் கொலை செய்த சம்பவம் ஆசிரியர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0