ஓடும் பேருந்தின் படியில் அமர்ந்து சரக்கு அடித்த போதை ஆசாமிகள் : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
25 August 2022, 7:03 pm

திருப்பூர் ; திருப்பூரில் தனியார் பேருந்து பயணத்தின் போது, சிலர் படியில் அமர்ந்து மது அருந்தி சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து – அனுப்பர்பாளையம் தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. TN 39 BD 2626 எண் கொண்ட இந்தப் பேருந்தில், நேற்று இரவு பேருந்து சென்று கொண்டிருந்த போது படிக்கட்டில் அமர்ந்தவாறு நான்கு நபர்கள் மது அருந்தி செல்கின்றனர்.

இதனை காரில் சென்ற நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, தனியார் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் எப்படி அனுமதித்தார்கள் என்றும், படியில் அமர்ந்து மது அருந்தும் 4 பேர் மட்டும் இன்றி, பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

  • shankar have no other films than indian 3 movie ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே