மாணவிக்கு பாலியல் தொல்லை… தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது ; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்..!!

Author: Babu Lakshmanan
29 August 2022, 12:26 pm
Quick Share

திருவள்ளூர் ; பொன்னேரி அருகே போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக தனியார் பள்ளி மாணவர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பொன்னேரி அருகேயுள்ள கொக்கு மேடு பாரத் மெட்ரிக் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், பொன்னேரி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் பற்றி புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஆசிரியரை விடுவிக்க கோரி பள்ளியில் மாணவர்கள் இன்று திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் காவல் துறையினர் மாணவர்களிடம் சமரசம் மேற்கொண்டனர்.

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சமூக அறிவியல் ஆசிரியர் ஆரோக்கியராஜ் குறித்து நீதிமன்றம்தான் முடிவு செய்யும் என்றும், ஆசிரியர் விவகாரத்தில் மாணவர்கள் அவரை விடுவிக்க போராட வேண்டாம் என பொன்னேரி காவல்துறை ஆய்வாளர் மார்ட்டின் பிரேம் ராஜ் அறிவுறுத்தினார். இதனை ஏற்று மாணவர்கள் மீண்டும் வகுப்புக்கு சென்றனர்.

Views: - 212

0

0