அங்கன்வாடி மையத்தில் தி.மலை ஆட்சியர் திடீர் ஆய்வு: குழந்தைகளுக்கு மதிய உணவை பரிமாறினார்..!!

Author: Aarthi Sivakumar
19 December 2021, 10:37 am
Quick Share

திருவண்ணாமலை: சே.கூடலூர் பகுதியில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மதிய உணவை பரிமாறி உள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் சே.கூடலூர் பகுதியில் அரசுப்பள்ளியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் திடீர் ஆய்வு நடத்தினார்.

அங்கு உள்ள சமையல் செய்பவர்களிடம் உணவின் தரம் குறித்து அவர் கேட்டறிந்தார். ஆய்வின் போது அங்குள்ள குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மதிய உணவை பரிமாறினார். இதன் பிறகு குழந்தைகள் சாப்பிடும் போது அவர்கள் அருகில் அமர்ந்த மாவட்ட ஆட்சியர் , அவர்களிடம் உணவின் ருசி குறித்து கேட்டறிந்தார்.

மேலும் குழந்தைகளிடம் அவர் உணவில் உள்ள காய்கறிகளை வீணாக்கக்கூடாது என அறிவுரை வழங்கினார்.

Views: - 189

0

0