பக்தர்களின் பயன்பாட்டிற்கு வந்த திருவண்ணாமலை தங்கத்தேர் : அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 October 2021, 12:10 pm
Tvmalaoi Car Sekar Babu -Updatenews360
Quick Share

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் கொரோனா தொற்று காரணமாக பக்தர்களின் பயன்பாட்டிற்கு இல்லாமல் தங்கத்தேர் கோவிலுக்கு அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று பக்தர்களுக்காக தங்கதேரினை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

கோவில் வளாகத்தில் உள்ள கலைஞர் தல என்ற மரக்கன்று நட்டார். அதனை தொடர்ந்து போதி ஓதுவார் பள்ளி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்கள் தங்கும் விடுதி ரூபாய் 31.கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தங்கும் விடுதினை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ஆணையாளர் கலந்து கொண்டனர்.

Views: - 179

0

0