காஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் மரணம்.! நாட்டுக்கு அற்பணித்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி.!!

1 August 2020, 11:35 am
Thiruvarur Soldier Dead - Updatenews360
Quick Share

திருவாரூர் : ஜம்மு காஷ்மீரில் குண்டு பாய்ந்து உயிரிழந்த மன்னார்குடியை சேர்ந்த ராணுவ வீரர் திருமூர்த்தியின் உடலை விரைவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க உறவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே புள்ளவராயன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் மகன் திருமூர்த்தி (வயது 47). இவர் 31 வருடமாக எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த போது கடந்த 26ந்தேதி இரவு துப்பாக்கி குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த திருமூர்த்தி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

இவருக்கு மனைவி தமிழரசி (வயது 44) மகள் அகல்யா (வயது 23), மகன் அகத்தியன் (வயது 20) ஆகியோர் உள்ளனர் . இது குறித்து திருமூர்த்தி சகோதரர் கூறுகையில் பொங்கல் விடுமுறைக்கு வந்து விடுமுறை முடிந்த பிறகு உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவதால் காஷ்மீருக்கு திரும்ப முடியமால் ஜுலை 3-ந்தேதி தான் பணிக்கு சென்றார்.

திடீரென நேற்று இறந்து விட்டதாக வந்த செய்தி வேதனை அளிக்கிறது. என் தம்பியை நாட்டுக்கு அர்பணித்துள்ளோம் திருமுர்த்தியின் இறந்த உடலை காலம் தாழ்த்தாமல் உடலை விரைவில் சொந்த அனுப்பி வைக்க வேண்டும் , 26-ந்தேதி கார்க்கில் நினைவு தினத்தன்று நடந்த இந்த சம்பவத்தை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .

காஷ்மீரில் மன்னார்குடியை சேர்ந்த ராணுவ வீரர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

Views: - 12

0

0