இந்த மாவட்டம் கல்வில கடைசி.. டாஸ்மாக் மது விற்பனைல முதலிடம்.. இது தமிழகத்தின் சாபக்கேடு : பாமக தலைவர் அன்புமணி வேதனை!!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2022, 6:02 pm

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் கொல்லியங்குளம் நெல்லிதோப்பில் நடந்த பா.ம.க., ஒருங்கிணைந்த மாவட்ட புதிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே., மணி தலைமையில் பேராசிரியர் தீரன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டம் மிகவும் பின் தங்கிய மாவட்டமாக உள்ளது. எனவே இதை பிரிக்க வேண்டும் என கோரிக்கை பா.ம.க., சார்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருந்தோம்.

அது நிறைவேற்றப்பட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டாக பிரிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அதிகமாக குடிசைகள் உள்ள ஒரு மாவட்டம் விழுப்புரம் ஆகும். மேலும் கல்வி வேலைவாய்ப்பில் இந்த மாவட்டம் கடைசி இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் டாஸ்மாக்கில் மட்டும் விழுப்புரம் மாவட்டம் முதலிடத்தில் பெற்றுள்ளது.

தமிழக முதல்வர் விழுப்புரம் மாவட்டத்திற்கு தனி கவனம் செலுத்த வேண்டும். ஏன் என்று கேட்டால் விழுப்புரம் மாவட்டம் டாக்டர் ராமதாஸ் பிறந்த மாவட்டம் எனவே சிறப்பு கவனம் செலுத்தி அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். திண்டிவனத்தில் மகளிர் கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்பட வேண்டும். இதுபோன்று மயிலம் சட்டமன்ற தொகுதிக்கும் விக்கிரவாண்டிக்கும் இடையில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்பட வேண்டும்.

தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் தேக்கி வைக்கின்ற பெரிய அளவில் தடுப்பணை கட்டி தர வேண்டும். சங்கராபரணி மற்றும் தென்பெண்ணை ஆற்றில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் வானம் பார்த்த பூமி மிக அதிகமாக உள்ளது. எனவே நந்தன் கால்வாய் திட்டத்தை கடந்த ஆட்சியில் அறிவிப்பு வெளியிட்டதோடு சரி இதுவரையில் அது செயல்படுத்தாமல் உள்ளது. ஆகவே நந்தன் கால்வாய் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் நிலுவையாக உள்ள பணத்தை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். உ.பி முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் ஒரு சமூக போராளி மக்களுக்காக போராடியவர். இவர் இறந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைவதாகவும் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அன்புமணி தெரிவித்தார்.

பசுமைத்தாயகம் சார்பில் காலநிலை மாற்றம் குறித்து சென்னை ஓட்டம் என்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடந்தது. இயற்கை சீற்றம், வெப்பநிலை மாற்றம், 100 ஆண்டுகளில் வெப்பம் அதிகம், என ஒவ்வொரு ஆண்டும் காலநிலை தொடர்பாக அறிவிப்பு வெளியாகி வருகிறது.

ஒரு பக்கம் வறட்சி மறுபக்கம் மழை வெள்ளம் இனிவரும் காலங்களில் கால நிலை மாற்றம் குறித்த உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் உலகத்தை காப்பாற்ற முடியாது என ஐநா சபை எச்சரித்துள்ளது. எனவே காலநிலை மாற்றம் குறித்து நடவடிக்கைகளை நாம் விரைவாக எடுக்க வேண்டும்.

தற்பொழுது மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி திணிப்பதற்கு முயற்சித்தால் அதை பாமக சார்பில் கடுமையாக எதிர்ப்போம் என அவர் தெரிவித்தார் . விருப்பப்பட்டு இந்தி படித்தால் யார் வேண்டுமானாலும் படிக்கலாம் ஆனால் இந்தி மொழியை யார் மீதும் திணிக்க கூடாது என்பதில் பா.ம.க உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.

தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. மேலும் சென்னை போன்ற பெருநகரங்களில் வடிகால் வசதி பணிகள் 50% மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். வருகின்ற 2026ல் பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் இதற்கான வியூகங்கள் வருகின்ற 2024 முதல் பாமக தீவிரமாக அமைக்கும் என அன்புமணி ராமதாஸ் உறுதியாக தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!