இப்படியும் செய்யலாமே… உக்கடம் போக்குவரத்து நெரிசலை குறைக்க இதுதான் ஒரே வழி : செவி சாய்க்குமா மாநகராட்சி?!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 December 2023, 7:51 pm

இப்படியும் செய்யலாமே… உக்கடம் போக்குவரத்து நெரிசலை குறைக்க இதுதான் ஒரே வழி : செவி சாய்க்குமா மாநகராட்சி?!!!

கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது ரூ.168 கோடி மதிப்பில் 10.60 ஏக்கர் பரப்பளவில் வெள்ளலூர் அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. மாநகருக்கு வரும் வெளியூர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் நேரடியாக எல்&டி பை பாஸ் சாலையை பயன்படுத்தி வெள்ளலூருக்கு வந்து செல்லும் வகையிலும், ஏறத்தாழு 300 பேருந்துகள் நிறுத்தும் வகையில் பிரமாண்ட பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 65 % பணிகள் நிறைவடைந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனிடையே, பேருந்து நிலையத்துக்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் புதர்மண்டி காணப்படுகின்றன.

நிதியில்லை என்றால் பொது மக்களின்‌ பங்களிப்புடன்‌ நடத்தக்கூடிய நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள பஸ்‌ ஸ்டாண்ட்‌ கட்டுமான பணிகளை நிறைவேற்றி பயன்பாட்டு கொண்டு வரலாம் என வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழு சார்பாக கோவை மாநகராட்சி ஆணையருக்கு வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தகவல் அளிக்கும் உரிமை சட்டம் மூலம் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழு அளித்த மனு குறித்து கோவை மாநகராட்சி பதில் கடிதம் வெளியாகியுள்ளது. அதில் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் நமக்கு நாமே திட்டம் மூலமாக பேருந்து நிலையம் கட்டுவதற்கு அரசு ஒத்துழைப்பு வழங்க கோரப்பட்டுள்ளது.

மேலும் கட்டுமான பணியானது அரசின் இறுதி உத்தரவிற்கு பிறகு தொடரப்படும் என பதில் கடிதம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் தற்போது பணிகளுக்காக உக்கடம் பேருந்து நிலையம் குறுகிய நிலையில் உள்ளது.

குறிப்பாக பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி செல்ல உக்கடம் பேருந்து நிலையத்தில்தான் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்து நிலையம் தற்போது மேம்பால பணிகளுக்காக சுருக்கப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தை மாற்றினால் மக்களுக்கு இது உபயோகமாக இருக்கும் என வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழு சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!