திரையரங்குகள் வேண்டவே வேண்டாம்.. ஒதுங்கும் பிரபலங்கள்.. என்ன காரணம் தெரியுமா.?

Author: Rajesh
5 May 2022, 11:41 am
Quick Share

கொரோனா காலகட்டத்தின் போது பல தொழில்கள் மிகப் பெரிய சரிவை சந்தித்தாலும், ஒடிடி நிறுவனங்கள் தலை தூக்கியது. ஐடி நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள், தொழிற்சாலைகள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு பொழுதுபோக்காக இருந்தது ஓடிடி தான்.

தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் பெரிய பட்ஜெட் படங்கள் கூட ஓடிடிவியில் ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு காரணம் தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. அதாவது சென்சார் பிரச்சனை ஓடிடியில் கிடையாது.

மேலும் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் விநியோகஸ்தர்கள் என பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. இதனால் பலரும் தற்போது ஓடிடியையே நாடி வருகிறார்கள். மேலும் திரையரங்குகள் போலவே இந்த நிறுவனங்களும் வார இறுதி நாட்களில் நான்கு படங்களை குறிவைத்த வெளியிடுகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணி காகிதம் படம் உருவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் டைட்டானிக் காதலும் கவுந்து போகும்.

இதைத் தொடர்ந்து பிக்பாஸ் மூலம் பிரபலமான தர்ஷன் மற்றும் லாஸ்லியாவுடன் இணைந்து கேஎஸ் ரவிக்குமார் நடித்துள்ள படம் கூகுள் குட்டப்பா. இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றிருந்தது. கடைசியாக பத்மகுமார் இயக்கத்தில் ஆர்கே சுரேஷ் மற்றும் பூர்ணா நடிப்பில் உருவாகியுள்ள படம் விசித்திரன்.
இந்த நான்கு படங்கள் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருந்தாலும் தியேட்டரை நாடாமல் ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கு காரணம் திரையரங்குகளுக்கு வரும் மக்கள் கூட்டமும் தற்போது குறைந்து வருகிறது.

குறைந்த பட்ஜெட் படங்களுக்கு தகந்த வருமானம் தற்போது திரையரங்குகளில் கிடைப்பதில்லை. இதன் காரணமாகவே சிறிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் ஓடிடி தங்களது திரைப்படங்களை வெளியிட முடிவு செய்து வருவதாக கூறப்படுகிறது.

Views: - 424

0

0