தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
24 August 2022, 6:53 pm
Quick Share

துப்பாக்கி சூடுக்கு காரணமான காவல்துறை, வருவாய்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லை ஆலை ஆதரவு கூட்டமைப்பு சார்பில் தலைவர் தியாகராஜன், செயலாளர் கணேசன், துணைத் தலைவர் கல்லை ஜிந்தா மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் முருகன், துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குனர் தனலட்சுமி, ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது தூத்துக்குடி வாழ்வாதார மக்கள் பாதுகாப்பு சங்க தலைவர் தியாகராஜன் பேசுகையில், ஸ்டெர்லை ஆலை விரிவாக்கத்தினால் முதலில் 100 நாள் போராட்டம் நடைபெற்றது. பின்னர் அந்த போராட்டம் கலவரமாக மாறியது. அருணா ஜெகதீசன் அறிக்கையில் கூறியது போல், துப்பாக்கி சூடு நடைபெற்ற சம்பவம் கலவரமாக மாறி 13 பேர் இறந்து போனதிற்கும், ஸ்டெர்லை ஆலைக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. ஆகவே, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க வேண்டும் என கூறினார்.

செயலாளர் கணேசன் பேசுகையில், நீதி அரசர்கள் அறிக்கை ஒரு நியாயமான அறிக்கையாகும் அதற்கு முதலில் நன்றியினை தெரிவித்துகொள்வதாக தொடங்கிய அவர், அருணா ஜெகதீசன் ஆணையம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது இங்கே நடைபெற்ற துப்பாக்கிச் சூடு கொடூரமான சம்பவம், அந்த துப்பாக்கி சூட்டை கண்டிக்கிறோம்.

அதற்கு காரணமாக இருந்த காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுகொள்வதாக கூறிய அவர், அருணாஜெகதீசன் அறிக்கையில், சொல்லியது போல் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் மற்றும் கலவரத்தில் காயமான காயங்கள் பட்ட நபர்களுக்கு இழப்பீடு குறைவாக உள்ளது. அதை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்கின்ற முறையில் ஒரு பரிந்துரை செய்திருக்கிறார்கள் அதையும் வரவேற்கிறோம். அவர்களுக்கு உரிய நிவாரணம் அளித்து அவர்கள் வாழ்க்கை வளம் பெறச் செய்ய வேண்டும்.

துப்பாக்கி சூட்டிற்கும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் சம்பந்தமில்லை என்று அறிக்கையில் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. ஆகையால், துப்பாக்கி சூட்டுக்கு காரணம் இல்லாத ஸ்டெர்லைட் ஆலை முன்பு போல தொடர்ந்து இயங்க வேண்டும். 20 ஆண்டுகளாக இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு, நாட்டுக்கு அவ்வளவு பணியாற்றி இருக்கிறது. ஸ்டெர்லை ஆலை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மட்டுமான காரணத்தை கொண்டு அது மூடப்பட்டு இருக்கிறது.

மேலும், அரசு நியமித்த ஆணையத்தின் படி, அந்த அறிக்கையின் படி, ஆலையை மூடுவது சிறிதும் சரியல்ல எனவே அரசு தயங்காமல் இந்த ஆலையை திறக்க வேண்டும். இதன் மூலமாக இங்கே பாதிப்புக்கு உள்ளான 25 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பங்களை வாழ்வாதாரம் மேம்பட்டு, நாட்டின் பொருளாதாரம் உயர வேண்டும். இன்றைய தினம் தாமிரம் இறக்குமதி ஏற்றுமதி செய்து கொண்டு இருக்கிறோம். 4 ஆண்டுக்கு முன் தாமிரம் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு நாம் பழைய நிலைமைக்கு வர ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க வேண்டும் என கூறினார்.
பின்னர் ஸ்டெர்லை ஆலையை திறக்க வேண்டும் என அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

Views: - 158

1

0