தண்ணீர் பிடிப்பதில் தகராறு… பக்கத்து வீட்டுக்காரர் கொலை… தலைமறைவாக இருந்த குடும்பத்திற்கு ஆயுள் தண்டனை!!

Author: Babu Lakshmanan
22 July 2022, 9:18 pm
court judgement - updatenews360
Quick Share

தூத்துக்குடி : தண்ணீர் பிடிப்பதில் தகராறில் தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை கொலை விட்டு மும்பையில் தலைமறைவான ஓரே குடும்பத்தை சார்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு எண் இரண்டு நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதுறை சேர்ந்தவர் ராஜேந்திரன் கடந்த 2014ஆம் ஆண்டு இவருக்கும் இவரது பக்கத்து வீட்டுக்காரர் கணபதிக்கும் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆக்கிரமடைந்த கணபதி மற்றும் அவரது மனைவி கருப்பாயி, மகன்கள் ராமர், லட்சுமணன், கண்ணன் ஆகியோர் ராஜேந்திரனை அடித்தும் கத்தியால் குத்தியும் உள்ளனர்.

இதில், ராஜேந்திரன் பலத்த காயமடைந்து பரிதாபமாக இறந்தார். இதனை தடுக்க வந்த ராஜேந்திரனின் மனைவி பாண்டியம்மாளும் பலத்த காயமடைந்தார். இதுசம்பந்தமாக நாலாட்டின் புதூர் போலீசார் கணபதி உட்பட ஐந்து பேரை கைது செய்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு எண் இரண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் கணபதி மற்றும் அவரது குடும்பத்தினர் மும்பைக்கு தப்பி ஓடி விட்டனர். இதனை அடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இவர்களை மும்பையில் இருந்து கைது செய்து போலீசார் அழைத்து வந்தனர். அதன்பின் குற்றம் சாட்டப்பட்ட கணபதி அவரது மனைவி கருப்பாயி மற்றும் மகன்கள் மூன்று பேர் உட்பட 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூபாய் 1000 அபராதம் குறித்து நீதிபதி பிலிப்அலெக்ஸ் நிக்கோலஸ் தீர்ப்பளித்தார்.

மேலும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் ஆஜரானார்.

Views: - 452

0

0