அஜித் மரணத்தில் தவறு செய்தவர்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டும் : நடிகர் மன்சூர் அலிகான் காட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2025, 1:00 pm

மதுரையில் ஆர்.ஆர் பிக்ஸர்ஸ் வழங்கும் “அறியாமை” எனும் திரைப்படம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதில் நடிகர் விநாயக் – நடிகை சாரா மற்றும் நடிகர் முன்னணி நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இதனை இயக்குநர் அழகுமலை மற்றும் வசந்தகுமார் இயக்கி வருகின்றனர். இந்நிலையில் மதுரை காதக்கிணறு பகுதியில் படத்தின் ஒளிப்பதிவு நடைபெற்று வருகிறது. அப்போது வில்லன் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துவரும் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம், அரசியலில் ஒரு புரட்சி, போராட்டம், ஒரு சண்டையே இனி வரவிருக்கிறது. ஆரம்பத்திலிருந்து மதுரைக்கு சினிமாவுக்கும் சம்பந்தம் உள்ளது. நானும் மதுரைக்காரன் தான். திண்டுக்கல் முன்னால் மதுரையில் தான் இருந்தது. தற்போது பிரித்து விட்டார்கள்.

அரசியலில் பூதாகரமாக இறங்க வேண்டிய அவசியம் மற்றும் தேவை இருக்கிறது. அரசியல் என்று வந்துவிட்டால் அண்ணன் தம்பி என்பதெல்லாம் மகாபாரத கதை தான். விஜய்க்கு ஆதரவா எதிர்ப்பா என்று தற்போது நான் சொல்லவில்லை. அறியாமை என்ற படத்தில் தான் நடிக்கிறேன் அது மட்டுன் தான் எனக்கு இப்ப தெரியும்.

சினிமாவில் போதை கலாச்சாரம் வளர்ந்துவிட்டதா என்ற கேள்விக்கு நான் போதையை கலாச்சாரம் பற்றியெல்லாம் ஒன்றும் சினிமாவில் கேள்விப்படவில்லை. என்னுடைய மகனே போதையில் தொடர்பான வழக்கில் மாட்டிக்கொண்டான். நான் தான் அவனை போலீசிடம் அனுப்பி வைத்தேன். போதை சினிமாவில் மட்டும் அல்ல எங்கு புழங்கினாலும் தவறு தான்.

ஸ்ரீகாந்த் போன்ற நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சிலர் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. முக்கியமான நபர்களை மட்டுமே வைத்து படம் எடுக்கிறார்கள். பல நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. வெளிநாடுகளில் எல்லாம் கடுமையான சட்டங்கள் இருப்பதால் போதைகள் தடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் போதைப் பொருளை காவல்துறை தடுப்பதில்லை. உணவுகள் நஞ்சாகவிட்டது, உணவு பொருட்கள் எல்லாம் கார்பிரேட் கையில் உள்ளது. இதற்கெல்லாம் ஒரு ஆள் வரவேண்டும், போல. வெளிநாடுகளில் சரியாக செய்யப்படுகிறது. ஆனால் இங்கு சாலை கூட சரியாக இல்லை.

மடப்புரம் அஜித் உயிரிழப்பில் சினிமாத்துறையினர் குரல் கொடுக்கவில்லையே என்ற கேள்விக்கு, அஜித் குமாருக்கு நடந்த சம்பவம் ரொம்ப தவறானது. அஜித்குமார் விஷயத்தையும் யார் தவறு செய்திருந்தாலும் அதில் தண்டனை வழங்க வேண்டும்.

புகார் கொடுத்த பெண், அடித்த போலீஸ், உத்தரவு போட்ட அதிகாரி என எல்லாரையும் விசாரணை செய்ய வேண்டும். தவறு செய்திருந்தால் அவர்களை பொதுமக்கள் மூலம் கல்லால் அடித்து கொல்ல வேண்டும். தண்டனை கடுமையாக இருந்தால் தான் தவறுகள் குறையும்.

சாத்தான் குளம் வழக்கில், ஸ்டெர்லைட் வழக்கில் என்ன நடந்துவிட்டது. தவறு செய்வர்களை தூக்கிலா போட்டார்களா?. தவறு செய்த அதிகாரிகள் வேலை மாறுதலில் அடுத்த அடுத்த மாவட்டம் போய்விடுகின்றனர்.” எனவும் வேதனை தெரிவித்தார். மேலும் முருகன் பாடல்கள் பாடி அசத்தினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!