போலீசாரின் சட்டையை பிடித்து மிரட்டல்.. PMK நிர்வாகிகள் அதிரடி கைது : பாமகவினர் மறியலால் பரபரப்பு.!!

Author: Udayachandran RadhaKrishnan
20 April 2024, 4:48 pm

போலீசாரின் சட்டையை பிடித்து மிரட்டல்.. PMK நிர்வாகிகள் அதிரடி கைது : பாமகவினர் மறியலால் பரபரப்பு.!!

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டி,கீரனூர் பகுதியில் அரசு ஆரம்ப பள்ளியில் நேற்று கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

நேற்று மாலை வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் பாமகவினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் போலீசார் தலையிட்டு சமாதான பேச்சு வார்த்தை செய்து இருதரப்பையும் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

நேற்று நடைபெற்ற இந்த சம்பவத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டதாக தெரிகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோதிலிங்கம் மற்றும் அக்கட்சி சேர்ந்த நிர்வாகிகள் திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாலாஜி என்பவருடைய சட்டையை பிடித்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: ‘பிரசார் பாரதி’ அல்ல.. பாஜகவின் பிரசார பாரதி : Doordarshan காவிமயமானதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!

இதனால் இன்று திருக்கோவிலூர் போலீசார் பாமக ஒன்றிய செயலாளர் ஜோதிலிங்கம். ஜெயராமன் இரண்டு பேரையும் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருவதால் கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்க கோரியும் வலியுறுத்தியும் மாநில துணை செயலாளர் அன்பழகன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி விழுப்புரம் மாவட்ட செயலாளர் பாலசக்தி ஆகியோர் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!