‘வாங்காத கடனுக்கு வட்டி’…வீட்டை ஏலம் விடுவதாக மிரட்டல்: தனியார் வங்கி மீது தம்பதி பரபரப்பு புகார்..!!

Author: Rajesh
5 April 2022, 3:47 pm

கோவை: வாங்காத கடனுக்கு தவணை செலுத்தவில்லை எனக்கூறி தனியார் வங்கி ஊழியர்கள் மிரட்டல் விடுப்பதாக தம்பதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சரவணன். அவரது மனைவி தீபா. அரிசி வியாபாரம் செய்து வரும் இவர் ரெப்கோ வங்கியின் மூலம் 2018ம் ஆண்டு 6 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.

அதன்பின் டாப்-அப் லோனுக்காக 2 லட்சம் கேட்டு அது ரெப்கோ வங்கியில் கிடைக்காததால் ஆதார் ஹவுசிங் பைனானன்ஸ் என்ற வங்கியை முகவர் மூலம் சரவணன் நாடியுள்ளார். இந்நிலையில், அவர் கேட்ட டாப் அப் லோனின் முழுத் தொகையையும் வழங்காமல் தொடர்ந்து வட்டியை மட்டும் கட்டி வர வங்கி ஊழியர்கள் கூறியதாகச் தெரிகிறது.

இதை தொடர்ந்து வட்டியை சரவணன் கட்டி வந்த நிலையில் தற்போது உங்களது சிபில் ஸ்கோர் குறைந்துவிட்டதால் கடனின் மீதி தொகையை கொடுக்க முடியாது என்று கூறிய ஆதார் ஹவுஸிங் ஃபைனான்ஸ், வங்கி சரவணனின் கடனை வாராக்கடனாக்கி அவரது வீட்டையும் ஏலம் விட நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் ஹவுசிங் லோன் கட்டாததால் இந்த வீடு அடமானத்தில் உள்ளது என்றும் சரவணனின் வீட்டுச் சுவரில் வங்கி ஊழியர்கள் எழுதியுள்ளனர். இந்நிலையில் கடனை செலுத்தாவிட்டால் வீட்டை இடித்து விடுவதாகவும் வங்கி ஊழியர்கள் மிரட்டியதாக சரவணன் புகார் தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டதாகவும், தகுந்த பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் சரவணன் மற்றும் தீபா தம்பதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • shankar have no other films than indian 3 movie ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே