‘தலித்தாக இருந்துகொண்டு புல்லட் ஓட்டுவியா?’ கையை வெட்டிய கும்பல்.. சிவகங்கையில் பரபரப்பு!

Author: Hariharasudhan
13 February 2025, 4:07 pm

சிவகங்கையில், ‘தலித்தாக இருந்துகொண்டு புல்லட் ஓட்டுவியா?’ எனக் கேட்டு இளைஞரின் கையை வெட்டியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அடுத்த மேளக்காடாவர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமன் – செல்லம்மா தம்பதி. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு, அய்யாசாமி என்ற மகன் உள்ளார். இவர், சிவகங்கையில் உள்ள அரசுக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

மேலும், அய்யாசாமியின் தந்தை சிறுவயதிலேயே உயிரிழந்ததால், அவரின் தாய் செல்லம்மா, அய்யாசாமியின் சித்தப்பா பூமிநாதனை திருமணம் செய்து ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், பூமிநாதன் கடந்த ஆண்டு புல்லட் வாகனத்தை வாங்கி உள்ளார். இதனையடுத்து, ஒரு முறை பூமிநாதனின் புல்லட் வாகனத்தை மாற்று சமூகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சேர்ந்து அடித்து உடைத்திருக்கின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பூமிநாதன், அய்யாசாமி இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நேற்று கல்லூரியை முடித்துவிட்டு, அய்யாசாமி புல்லட் வாகனத்தில் வேண்டும் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, மூன்று இளைஞர்கள் அவரை வழிமறித்து, பட்டியலின சாதியில் பிறந்து எப்படி இந்த புல்லட் வண்டியை ஓட்டலாம், கை இருந்தால் தானே புல்லட் ஓட்டுவ” எனக் கூறி, அய்யாசாமியின் கையை வெட்டி உள்ளனர்.

Three arrested for threating in Sivaganga

பின்னர், அங்கிருந்து ஓடி வந்த அய்யாசாமி, உடனடியாக பெற்றோரிடம் கூறியுள்ளார். அதன்பின், அவருக்கு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அய்யாசாமிக்கு வெட்டப்பட்ட கையை சேர்க்கும் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: தவெக நிர்வாகியின் தொல்லை.. 8ம் வகுப்பு மாணவியின் விபரீத முடிவு!

இதனிடையே, அய்யாசாமியின் வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர்கள், வீட்டை அடித்து உடைத்து சூறையாடியுள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக போலீசுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிப்காட் போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!