A For Apple இல்லையா? ஆசிய சாதனை படைத்த மூன்று வயது சிறுவன் : இது நம்ம லிஸ்டுலயே இல்லப்பா!!

22 November 2020, 2:12 pm
3 years old Acheive - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பழனியில் மூன்று வயது சிறுவன் அனைத்துவகை வாகனதயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களையும் தெரிவித்து ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரம் பகுதியில் வசித்து வருபவர் மணியாதவ் ஆர்த்தி தம்பதி. இவர்களுக்கு மூன்று வயதில் சர்னித் அபினவ் என்ற மகன் உள்ளான். சிறுவன் சர்னித் அபினவ் மோட்டார் தயாரிப்பு நிறுவனங்களின் லோகோக்களை கண்ணில் பார்த்தவுடன் அந்த நிறுவனங்களின் பெயரை சரளமாக தாமதமின்றி சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

சிறுவனின் இந்த சாதனையை பாராட்டி இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டு ஆகிய சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிறுவன் சர்னித்அபினவ் உடைய பெற்றோர் தெரிவித்ததாவது:-  இரண்டரை வயதில் கார்களின் லோகோவை பார்த்து அதன் பெயரை உச்சரிப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தோம். தங்களது மகனுக்கு இதில் ஆர்வம் இருப்பதை கண்டு அவனுக்கு பயிற்சி அளித்தோம். இதன்மூலம் ஒருசில நாட்களிலேயே உலகில் உள்ள 185பிரபலமான வாகன தயாரிப்பு நிறுவனங்களின் பெயரை சர்வ சாதாரணமாக சொல்ல ஆரம்பித்தான்.

மகனின் செயலை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அவர்கள் மகன் சர்னித்அபிநவ்விடம் பல்வேறு வகையில் சோதனைநடத்தி இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு புத்தகத்தில் சாதனையாளராக அறிவித்து சான்றிதழ், பதக்கம் ஆகியவை வழங்கினர்.

தொடர்ந்து இந்தியா, வங்கதேசம், இந்தோனேசியா, நேபால், வியட்நாம் ஆகிய நாடுகளின் ஒப்புதலுடன் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டு புத்தகத்திலும் இடம் வழங்கியுள்ளனர். மழலையர் பள்ளியில் ப்ரீகேஜி படித்துவரும் சிறுவன் சர்னித் அபிநவ் A FOR APPLE என்பதைக்கூட A FOR AUDI என்று கார்களின் பெயரிலேயே உச்சரிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் சர்னித் அபிநவ்வின் சாதனையை கின்னஸ் ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பிடிக்க அவர்களது பெற்றோர் முயற்சி செய்து வருகின்றனர்.   மூன்று வயதில் அனைத்து வகையான கார் நிறுவனங்களின் பெயரை பார்தத்வுடன் சொல்லி அசத்தி வரும் சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.