காளை முட்டி உரிமையாளர் பரிதாப பலி ; ஜல்லிக்கட்டில் பங்கேற்க வந்த போது நிகழ்ந்த சோகம்!!!

Author: Babu Lakshmanan
15 January 2022, 2:27 pm
Quick Share

திருச்சி : திருச்சி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வந்த போது மாடு முட்டி உரிமையாளர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை முதலே தொடங்கி நடைபெற்று வரும் திருச்சி திருவெறும்பூர் பெரியசூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் வரிசை எண் படி கட்டவிழ்த்து விடப்பட்டு வருகிறது. இதில் 112 டோக்கன் எண் கொண்ட
ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம்(29) காளையின் உரிமையாளர் தொழுவத்தில் அவிழ்த்து விடுவதற்காக காளையை அழைத்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவரின் காளை மீனாட்சி சுந்தரத்தை முட்டி தள்ளியது. படுகாயமடைந்த அவரை சுகாதாரத்துறையினர் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து தொடர்ந்து அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே மீனாட்சிசுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளையின் முட்டி உரிமையாளர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 380

0

0