சிறுமிகளை காவு வாங்கிய மின்னல்… அக்கா, தங்கை உயிரிழப்பால் சோகத்தில் மூழ்கிய கிராமம்!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2025, 6:04 pm

இடிதாக்கி அரசு பள்ளி மாணவிகள் அக்கா தங்கை இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியை அடுத்த அரியக்குடி புதூர் அருகே வாழவந்தபுரம் பகுதியைச் சேர்ந்த செய்து அஸ்பியா பானு (வயது 14) சத்திரக்குடி அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.

சபிதா பானு 10 வயது நிரம்பிய சிறுமி அதே கிராமத்தில் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார்.

இரு சிறுமிகளும் கிராமம் அருகே வேப்பம் கொட்டை எடுப்பதற்கு தாயிடம் சென்று உள்ளார். தாயின் முன்னதாகவும் குழந்தைகள் இருவரும் பின்னோக்கி விளையாடு கொண்டு சென்றிருந்த பொழுது திடீரென மின்னல் தாக்கி மயங்கி விழுந்துள்ளனர்.

அதைப் பார்த்த தாயார் கதறிய பொழுது அக்கம்பக்கிருந்து கிராம மக்கள் ஒன்று கூடி மயங்கிய பின் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சோதனை செய்தது இருவரும் சம்பவ இடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இரண்டு சிறுமிகள் இடி தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!