இன்று முதல் இரவு நேர ஊரடங்கு : மதுரையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளின் நேரம் குறைப்பு!!

20 April 2021, 12:15 pm
Bus Time -Updatenews360
Quick Share

மதுரை : தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமுலுக்கு வருவதால் மதுரையிலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளின் நேரம் குறைக்கப்பட்டு உள்ளது

தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமுலுக்கு வருவதால் மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளின் கடைசி நேரங்கள் பட்டியலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலம் வெளியிட்டது.

சேலம், கோவை, ஈரோடு, திருச்செந்தூர், நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கு மாலை 5 மணி வரையில் மட்டுமே பேருந்துகள் இயக்கம், கொடைக்கானலுக்கு மாலை 5.45 மணி வரையில் மட்டுமே பேருந்துகள் இயக்கம், திருப்பூர், பொள்ளாச்சி, இராமேஸ்வரம், தென்காசி ஆகிய ஊர்களுக்கு மாலை 6 மணி வரையில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கரூர், கம்பம், பழனி, திருச்சி, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு மாலை 7 மணி வரையில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகிறது. இராஜபாளையத்திற்கு இரவு 7.30 மணி வரை, தேனி, பெரியகுளம், திண்டுக்கல், சிவகங்கை, கோவில்பட்டி, சிவகாசி ஆகிய ஊர்களுக்கு இரவு 8 மணி வரையில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகிறது.

நிலக்கோட்டை, அருப்புக்கோட்டை, நத்தம் ஆகிய ஊர்களுக்கு இரவு 8.30 மணி வரையிலும் மட்டுமே பேருந்துகள் இயக்கம், மதுரையிலிருந்து சென்னைக்கு பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பேருந்து நிலையங்களில் பணிகளை கண்காணிக்க அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம், பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை செய்தும், சானிடேசர் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது

Views: - 161

0

0