கோவை சசிக்குமார் கொலை செய்த பாணியில் திருப்பூர் இந்து முன்னணி பிரமுகர் கொலை.. மீண்டும் அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2025, 10:56 am

திருப்பூர் குமாரனந்தபுரம் காமராஜர் தெருவில் வசித்து வந்த இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு வழக்கறிஞர் பிரிவு ஒன்றிய தலைவராக இருந்தவர் பாலமுருகன். இவருக்கு வயது 35.

இதையும் படியுங்க: கோவையில் சாமி சிலைகள் சேதம்.. காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி!

இவர் அதே பகுதியில் பைனான்ஸ் தொழிலையும் நடத்தி வருகிறார். நேற்று நள்ளிரவு வீட்டருகே மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 3 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Tiruppur Hindu Munnani leader murdered

ஓட ஒட விரட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், 3 பேர் கொண்ட அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதே பாணியில் கடந்த 2016ஆம் ஆண்டு கோவையில் இந்து முன்னணி பிரமுகர் நள்ளிரவில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!