குறுகிய சந்து… அதிவேகப் பயணம் ; பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பெண் ; ஷாக் சிசிடிவி காட்சி..!!!

Author: Babu Lakshmanan
25 November 2023, 1:56 pm

திருப்பூரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் மற்றும் பனியன்களை லாரி மூலம் ஏற்றி செல்லும் (லாரி புக்கிங் நிறுவனங்கள்) செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனங்களுக்கு வரும் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி செல்வதால், அவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படுவதோடு, தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

இதனிடையே, லட்சுமி நகர் பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்களும் ஒன்றோடு நேருக்கு நேர் மோதிக் கொண்ட விதத்தில், வாகனத்தை ஓட்டி வந்த பெண்ணும், மற்றொரு வாலிபரும் படுகாயம் அடைந்தனர். இதை அடுத்து பொதுமக்கள் காயமடைந்த இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

https://player.vimeo.com/video/888190987?badge=0&autopause=0&quality_selector=1&player_id=0&app_id=58479

தற்போது இந்த சிசிடிவி காட்சியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?