பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை.! குப்பைத் தொட்டியில் இருந்து மீட்பு.!!
11 August 2020, 9:37 amதிருப்பூர் : குப்பை தொட்டியில் இருந்து பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை மீட்ட சைல்டு லைன் அமைப்பினர் குழந்தையை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள பழவஞ்சிபாளையம் அரசு பள்ளி அருகே உள்ள குப்பை தொட்டியில் இருந்து குழந்தையின் அழுகுரலை கேட்ட அப்பகுதி பொதுமக்கள், அருகே சென்று பார்த்த பொழுது பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை குப்பை தொட்டியில் இருந்தது தெரிய வந்தது.
உடனடியாக வீரபாண்டி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து சம்பவ இடம் வந்த காவல் துறையினர் சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் அளித்தனர்.108 ஆம்புலன்ஸில் அங்கு வந்த சைல்டு லைன் அமைப்பினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பரபரப்பாக காணப்படும் அந்த சாலையில் குழந்தையை வீசி சென்றது யார் என்பது குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.