நடுரோட்டில் கேட்பாரற்று கிடந்த பச்சிளம் குழந்தை.!!

23 May 2020, 4:37 pm
Tirupur Born Baby - Updatenews360
Quick Share

திருப்பூர் : கேட்பாரற்று சாலையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தையை மீட்ட பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்

திருப்பூர் பெரியார் காலனி பகுதியில் இன்று காலை சாலை ஓரமாக தொப்புள் கொடி அறுக்கப்பட்ட நிலையில் பச்சிளம் பெண் குழந்தை கேட்பாரற்று கிடந்துள்ளது.இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றனர் .

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தைகள் நல துறையினருக்கு தகவல் அளித்ததை அடுத்து குழந்தைகள் நலத் துறை யினர் குழந்தையை தனியார் மருத்துவமனையில் இருந்து மீட்டு திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பிறந்த பச்சிளம் குழந்தை சாலையில் கேட்பாரற்று கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகத்தில் எத்தனையோ பெண்கள் குழந்தைப் பேறு இல்லாமல் மனம் நொந்து தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், இச்சைகளுக்காக எத்தனையோ குழந்தைகள் சாலைகளில் வீசப்பட்டு வருவது கல்நெஞ்சங்களையும் கூட கரைய வைக்கிறது. ஆனால் குழந்தையை வீசிச் சென்ற அந்த குள்ளநரி கூட்டங்களுக்கு ஆண்டவனின் தண்டனை ஒன்ற இருக்கும் என மக்கள் தங்கள் மனதை ஆறவைத்துக்கொள்கின்றனர்.