அண்ணனின் கையை பிடித்து தங்கை இறந்த பரிதாபம்!!

30 August 2020, 3:39 pm
Chils dead - Updatenews360
Quick Share

திருப்பூர் : பயன்பாடில்லாத பாறைக்குழியில் குளிக்க சென்ற இளம்பிஞ்சுகளான அண்ணன் – தங்கை தண்ணீரில் மூழ்கி பலியான் சம்பவம் பரிதாபத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

திருப்பூர் அம்மாபாளையம் ராமகிருஷ்ணா வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரி. பூ வியாபாரம் செய்து வரும் ஈஸ்வரி, கணவரை பிரிந்தது வேறொருவடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு சரவணகுமார் (வயது 10) , ரோஷினி (வயது 8) என இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சனிக்கிழமை மதியம் தனது தோழி வீட்டுக்கு ஈஸ்வரி சென்றுள்ளார். மாலை ஈஸ்வரி வீட்டுக்கு வந்து குழந்தைகளை தேடிய போது காணவில்லை என்பதால், திருமுருகன்பூண்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில் இரு குழந்தைகளும் சனிக்கிழமை மதியம் முதல் மாலை வரை அங்குள்ள கானக்காடு பாறைக்குளியில் குளித்து விளையாடிக்கொண்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இன்று காலை பாறைக்குழியில் தேடிய நிலையில், குழந்தைகள் இருவரும் பிணமாக மிதந்தனர். பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு மேல் விசாரணை செய்து வருகிறார்கள்.