காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்.! விபத்து நடந்த சிசிடிவி காட்சி!!(வீடியோ)

10 August 2020, 8:10 pm
Dharapuram Acc CCTV- Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள பழனி சாலையில் நளினி கல்லூரி பிரிவு அருகே ஒட்டன்சத்திரத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற காரும் கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற காரில் பயணம் செய்த மோகன் என்பவர் லேசான காயமடைந்தார். இதில் காயமடைந்த மோகனுக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தாராபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்து நடந்த இடம் அதிக விபத்து நேரிடும் பகுதி என்பதால் தாராபுரம் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்தார். கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் காரில் இருந்து ஒரு இளைஞன் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Views: - 8

0

0