போலியான ஆவணம் மூலம் அரிசி கடத்தி விற்பனை.! லாரியை சிறைபிடித்து போலீசில் ஒப்படைப்பு.!!

11 August 2020, 11:47 am
Ration Rice Lrorry Seized - Updatenews360
Quick Share

திருப்பூர் : போலியான ஆவணங்கள் மூலம் அரிசி மூடைகளை ஏற்றி வந்து விற்பனை செய்ததாக  லாரியை பிடித்து போலீசில் ஒப்படைப்பட்டது.

திருப்பூர் முத்தணம்பாளையம் அருகே போலியான ஆவணத்தை காட்டி லாரியில் 850-க்கும் மேற்பட்ட அரிசி சிட்பங்கள் ஏற்றிக் கொண்டு வந்து திருப்பூர், முத்தணம்பாளையத்தில் இருந்து செவந்தாம்பாளையம் செல்லும் சாலையோரத்தில் லாரியை நிறுத்தி ஒரு சிட்பம் அரிசி ரூ.800 விற்பனை சிலர் விற்பனை செய்துள்ளனர்.

இந்நிலையில் தகவல் அறிந்த திருப்பூர் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம், அரிசி மற்றும் மொத்த விற்பனையாளர்கள் சங்கத்தினர் இதுகுறித்து கேட்டுள்ளனர். அரிசி விற்பனை செய்தவர்கள் முறையான பதிலளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் லாரியை சிறை பிடித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தெற்கு தாசில்தார் சுந்தரம், வருவாய் ஆய்வாளர் சிவசக்தி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. மேலும்  இது குறித்து அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி மொத்த விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் ஊரக போலீசில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 8

0

0