திருப்பூர் கொடி காத்த குமரன் பிறந்தநாள் : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மரியாதை!!

By: Udayachandran
4 October 2020, 12:03 pm
Tirupur Kumaran - Updatenews360
Quick Share

திருப்பூர் குமரனின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில்,திருப்பூரிலுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் 117- வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு, திருப்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் நினைவு மண்டபத்தில், “தமிழக அரசின் சார்பில்” தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாண்புமிகு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உடன் திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன், மாவட்ட எஸ்.பி. திஷாமிட்டல், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Views: - 76

0

0