பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல்.! கண்ணாடிகளை உடைத்து சேதம்.!!

2 August 2020, 8:11 pm
tirupur Attack - Updatenews360
Quick Share

திருப்பூர் : கொழுமம் பகுதியில் ஊரடங்கால் மூடப்பட்டிருந்த பெட்ரோல் பங்கில், பெட்ரோல் கேட்டு மர்மநபர்கள் ஒருவர் ஊழியர்களை தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலூகா, கொழுமம் பகுதியில் கண்ணப்பன் என்பவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் பெட்ரோல் பங்க் வந்த இரண்டு மர்ம நபர்கள் பெட்ரோல் கேட்டுள்ளனர்.

ஊரடங்கின் காரணமாக பெட்ரோல் பங்க் மூடப்பட்டுள்ளதால், பெட்ரோல் வழங்க இயலாது என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக மர்மநபர்கள் பெட்ரோல் பங்கின் முன்புற கண்ணாடியை உடைத்து ஊழியர்களை தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக பெட்ரோல் பங்க் நடத்தி வரும் கண்ணப்பன் குமரலிங்கம் போலீசாரிடம் புகார் அளித்தார். நடந்த சம்பவம் பதிவாகிய கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் ஊழியர்களை தாக்கிய மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 6

0

0